சென்னை: நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் காய்ச்சல் காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நேற்று காலை வீடு திரும்பினார்.
கமல்ஹாசனை இரு நாள்களுக்கு ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் கூறின.

