மீண்டும் தலைதூக்கும் குட்கா ஊழல் வழக்கு விவகாரம் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

மீண்டும் தலைதூக்கும் குட்கா ஊழல் வழக்கு விவகாரம் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

2 mins read
99310e07-1cbd-430e-96b1-4cec509756b9
முன்னாள் அமைச்சர்கள் ரமணா, விஜயபாஸ்கர் (வலது). குட்கா வழக்கு, லஞ்ச ஒழிப்­புத்­துறை சோதனை, ஜெய­லலிதா மரண விசா­ரணை என மூன்றுவித­ விசா­ர­ணை ­களை எதிர்நோக்கு கிறார் விஜயபாஸ்கர்.படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

சென்னை: குட்கா ஊழல் வழக்கு தொடர்பில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜ­ய­பாஸ்­கர், ரமணா உட்பட 21 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய் வதற்கு இவர்கள் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், இக்குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

தமி­ழ­கத்­தில் 2013ஆம் ஆண்­டில் குட்கா பொருள்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டது.

வரி ஏய்ப்பு புகார் தொடர்­பாக 2016ஆம் ஆண்­டில் மாத­வ­ராவ் என்ற குட்கா வியா­பா­ரி­யின் வீட்­டில் வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் நடத்திய திடீர் சோதனையில் ரூ.250 கோடி அள­வுக்கு வரி ஏய்ப்பு செய்­தி­ருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

சோதனையின்போது கைப்பற்றப் பட்ட ஆவ­ணங்­கள் மூலம் முக்­கிய துப்பு கிடைத்­தது.

சென்னை செங்­குன்­றத்­தில் மாத­வ­ராவ் நிறு­வ­னம் தயா­ரிக்­கும் எம்­டி­எம் குட்­காவை தடையை மீறி உற்­பத்தி செய்­ய­வும் அதே கிடங்­கு­களில் அவற்றைப் பதுக்கி வைத்து கடை­க­ளுக்கு விற்­பனை செய்­ய­வும் உத­வி­ய­தற்­காக அமைச்­சர்­க­ளுக்­கும் அதி­கா­ரி­க­ளுக்­கும் ரூ.40 கோடி லஞ்­சம் கொடுக்­கப்­பட்­ட­தாக ஆவ­ணங்­களில் கூறப்­பட்­டி­ருந்­தது.

அப்­போ­தைய சுகா­தா­ரத் துறை அமைச்­சர் சி.விஜ­ய­பாஸ்­கர், வணிக வரித்­துறை அமைச்­சர் பி.வி.ரமணா, முன்­னாள் டிஜிபி ராஜேந்­தி­ரன், முன்­னாள் சென்னை மாந­கர காவல் ஆணை­யர் ஜார்ஜ், காவல்­துறை, உணவு பாது­காப்­புத் துறை, வணிக வரித் துறை அதி­கா­ரி­கள் உள்­ளிட்ட பல­ருக்­கும் எம்­டி­எம் குட்கா நிறு­வ­னத்­தின் சார்­பில் கோடிக்­கணக்­கில் லஞ்­சம் கொடுக்­கப்­பட்­ட­தாக விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

முத­லில் தமி­ழ­கக் காவ­லர்­கள் விசா­ரித்த இந்த வழக்கை 2018ல் சிபிஐ கையில் எடுத்­தது.

இவ்விவ­கா­ரத்­தில் மாத­வ­ராவ் உட்­பட ஆறு பேர் கைது செய்­யப் பட்­ட­னர். அவர்­கள்­மீது 2018ல் குற்­றப்­பத்­தி­ரி­கையை சிபிஐ தாக்­கல் செய்­தது.

அதுதொடர்­பான விசா­ர­ணை­கள் நடை­பெற்று வரும் நிலை­யில், சென்னையில் உள்ள சிபிஐ நீதி­மன்­றத்­தில் கடந்த வாரம் சிபிஐ குற்­றப்பத்­தி­ரி­கை­யைத் தாக்­கல் செய்­தது. குட்கா ஊழல் வழக்­கில் முன்­னாள் அமைச்­சர்­கள் விஜ­ய­பாஸ்­கர், ரமணா உள்­ளிட்ட 21 பேரின் பெயர்­கள் குற்­றப்­பத்­தி­ரி­கை­யில் இடம்­பெற்­றுள்­ள­தாக சிபிஐ தெரி­வித்­துள்­ளது.