10 ரூபாய், 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை

சென்னை: அரசுப் பேருந்து­களில் ரூ.10, ரூ.20 நாண­யங்­களை வாங்க மறுக்­கும் நடத்­து­நர்­கள் மீது ஒழுங்கு நட­வ­டிக்கை பாயும் என போக்­கு­வ­ரத்துக் கழ­கம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

10 ரூபாய் நாண­யங்­கள் மத்­திய ரிசர்வ் வங்கி மூலம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு நாடு முழு வ­தும் புழக்கத்தில் இருந்து வந்த நிலையில், 20 ரூபாய் நாண­ய­மும் அறி­மு­கப்படுத்­தப்­பட்­டது.

எனி­னும், 10 ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொள்வதைப் போல் 10 ரூபாய் நாண­யங்­களைப் பெற்றுக் கொள்வதில் பலரும் ஆர்­வம் காட்­டு­வ­தில்லை.

தமி­ழ­கத்தின் பெரும்பாலான மாவட்­டங்­களில் இந்தப் பிரச் சினை பரவலாக இருந்து வரு கிறது. 10 ரூபாய் நாண­யம் செல்­லாது என அவ்­வப்­போது வதந்­தி­களும் பரவி வருகின்றன.

இதையடுத்து, 10 ரூபாய் நாண­யம் செல்­லும் என்­பது தொடர்­பாக விழிப்­பு­ணர்வு ஏற்­படுத்தப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கியும் 10 ரூபாய் நாண­யம் குறித்து விளக்­கம் அளித்துள்ளது. எனினும், 10 ரூபாய் நாண­யத்தை வாங்­கு­வ­தற்­கான தயக்­கம் தொடர்ந்து இருந்து­வருகிறது.

இந்­நி­லை­யில், சென்னை மாநகரப் போக்­கு­வ­ரத்துக் கழக மேலாண் இயக்­கு­நர் அ.அன்பு ஆபி­ர­காம் அனைத்து கிளை மேலா­ளர்­க­ளுக்­கும் சுற்­ற­றிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், மத்­திய அர­சால் வெளி­யி­டப்­படும் ரூ.10, ரூ.20 மதிப்­பி­லான நாண­யத்தைப் பய­ணச்­சீட்டு வாங்கு­வ­தற்­காக நடத்து­ந­ரி­டம் பய­ணி­கள் அளிக்­கும்­போது அதனை மறுக்­கா­மல் நடத்துநர்கள் பெற்றுக்கொண்டு, உரிய பய­ணச்­சீட்டுகளை பயணி களிடம் வழங்கவேண்­டும்.

எக்­கா­ர­ணம் கொண்­டும் அந்த நாண­யங்­க­ளை­ வாங்க மறுக்கக் கூடாது.

இது­தொ­டர்­பாக ஏதே­னும் புகார்­கள் பெறப்­பட்­டால், சம்­பந்­தப்­பட்ட நடத்­து­நர் மீது உரிய ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அன்பு ஆபி­ர­காம் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!