ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் சூடு பறந்த விவாதம்

புதுடெல்லி: ஜல்­லிக்­கட்­டுக்­குத் தடை­கோரி பீட்டா உள்­ளிட்ட விலங்­கு­கள் நல அமைப்­பு­கள் தொடர்ந்த வழக்கை இம்­மா­தம் 29ஆம் தேதிக்கு உச்ச நீதி­மன்­றம் ஒத்­தி­வைத்­தது.

காட்­சிப்­ப­டுத்­தப்­படும் விலங்­கு­கள் பட்­டி­ய­லில் இருந்து காளை­களை நீக்க நாடா­ளு­மன்­றத்­தில் சட்­டத் திருத்­தம் கொண்­டு­வந்­தால் என்ன என்று ஜல்­லிக்­கட்­டுக்கு எதி­ரான வழக்­கில் உச்ச நீதி­மன்­றம் கேள்வி எழுப்­பி­யுள்­ளது.

ஜல்­லிக்­கட்டு, கம்­பாளா, சக்­கடி விளை­யாட்­டு­களை நடத்த தமிழ்­நாடு, மகா­ராஷ்­டிர அர­சு­கள் இயற்­றிய சிறப்­புச் சட்­டங்­களை எதிர்த்து, பீட்டா உள்ளிட்ட அமைப்­பு கள் உச்ச நீதி­மன்­றத்­தில் தொடர்ந்த வழக்கு நீதி­பதி கே.எம். ஜோசப் தலை­மை­யிலான ஐந்து நீதி­ப­தி­கள் அமர்வு முன் நேற்று விசா­ர­ணைக்கு வந்தது.

அப்­போது பீட்டா அமைப்­பின் சார்­பில் வாதிட்ட மூத்த வழக்­க­றி­ஞர் சித்­தார்த் லூத்ரா, ஜல்­லிக்­கட்டை கலா­சா­ரம் என தமிழ்­நாட்­டால் கரு­த­மு­டி­யுமா? நாட்டு மாடுகளைப் பாது­காக்­க­வும் அவற்­றின் இன வளர்ச்­சிக்­கு உதவவும் ஜல்­லிக்­கட்டு பயன்படுகிறதா என்ற அடிப்­ப­டை ­யில் இவ்­வ­ழக்கு விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என வாதிட்­டார்.

அத்­து­டன், விலங்­கு­க­ளுக்கு தீங்கு இழைக்­கப்­ப­டக்­கூ­டாது என்­பதே விலங்­கு­கள் வதை தடுப்­புச் சட்­டத்­தின் நோக்­கம் என­வும் விலங்­கு­க­ளுக்­கும் உரி­மை­கள் உள்ளன என்­றும் லூத்ரா கூறி­னார்.

அப்­போது குறுக்­கிட்ட நீதி­பதி ஜோசப், "மனி­தர்­க­ளுக்கு உள்ள உரி­மை­கள் விலங்­கு­க­ளுக்கு இல்லை," எனச் சுட்­டிக்­காட்­டி­னார்.

ஒரு கொசு கடிக்­கும்­போது அதைக் கொன்­று­விட்­டால், விலங்கு கள் வதை தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டுமா அல்­லது கொசு­வி­டம் இருந்து நம்­மைக் காப்­பாற்­றிக்­கொள்ள வேண்­டுமா எனவும் அவர் கேள்வி எழுப்­பி­னார்.

அதற்­குப் பதி­ல­ளித்த வழக்­க­றி­ஞர் லூத்ரா, பாம்­பு­க­ளுக்­கும் விலங்­கு­கள் வதை தடுப்­புச் சட்­டம் பொருந்­தும் என்­றும் பாம்­பைக் கண்­டால் தூர வில­கிச் செல்­ல­ வேண்­டுமே தவிர அரு­கில் செல்­லக் ­கூ­டாது என்­றும் குறிப்­பிட்­டார்.

இத­னைத்தொடர்ந்து, குதிரை, யானை பந்­த­யம், போலோ விளை­யாட்­டு­கள் நடத்­து­வதை அந்­தந்த விலங்­கு­கள் மகிழ்ச்­சி­யாக ஏற்­றுக்­கொள்­கின்­ற­னவா என­வும் நீதி­பதி கள் கேள்வி எழுப்­பி­னர்.

அத்­து­டன், குத்­துச்­சண்டை போட்­டி­யா­ளர்­களில் சிலர் உயி­ரி­ழந்து விடு­வ­தை­யும் சுட்­டிக்­காட்­டிய நீதி­ப­தி­கள், அதற்­காக அந்­தப் போட்­டிக்­குத் தடை விதிக்­க­மு­டி­யுமா என்­றும் கேட்­ட­னர்.

எனவே, காளை­கள் துன்­பு­றுத்­தப்­ப­டு­வ­தாக பீட்டா அளித்­துள்ள சில புகைப்­ப­டங்­கள், தக­வல்­கள் ஒட்­டு­மொத்த விதி­மு­றை­களும் மீறப்­ப­டு­கின்­றன என்­பதை நிரூ­பிப்­ப­தற்கு போது­மா­ன­தாக இல்லை என்று தெரி­வித்து இவ்வழக்கு விசா­ர­ணையை வரும் 29ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்­தி­வைத்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!