கன்னியாகுமரி: கன்னியாகுமரி ரயில் நிலையம் ரூ.49¼ கோடி செல வில் நவீன தோற்றத்துடன் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
உலகத் தரத்துக்கு ஈடாக உள் கட்டமைப்பு வசதிகளோடு இந்த ரயில் நிலையம் ேமம்படுத்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நீர், ஆற்றல் மேலாண்மைத் திட்டம், சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள், மின் படிகள், மின்தூக்கிகள் போன்றவையும் இந்த ரயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ளன. இந்த வசதிகள் ஒரு விமான நிலையத்துக்குச் செல்வது போன்ற அனுபவத்தை பயணிகளுக்கு வழங்கும் என்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வெளிநாட்டு சுற்றுப் பயணிகளைக் கவரும் வகையில் விவேகானந்தர் நினைவு மண்டபம்போல் இந்த ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியானது வடிவமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது.


