உண்மையை மறைத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்: நீதிபதிகள்

உண்மையை மறைத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்: நீதிபதிகள்

2 mins read
e7e79196-1159-46e6-9a75-d201b4235f46
கோகுல்ராஜ். கோப்புப் படம். -

மதுரை: கோகுல்­ராஜ் கொலை வழக்கு தொடர்­பில் அவ­ரது பெண் தோழி சுவா­தியை மதுரை நீதி­மன்­றத்­தில் காவ­லர்­கள் நேற்று முன்­னி­லைப்­ப­டுத்­தி­னர்.

அப்­போது பேசிய நீதி­ப­தி­கள், "சாதி, சம­யத்­தை­விட சத்­தி­யம், தர்­மம், நியா­யம்­தான் முக்­கி­யம். உண்­மையை மறைத்­தால் உங்­கள் மீது குற்­ற­வி­யல் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என சுவா­தியை எச்­ச­ரித்­த­னர்.

சேலம் மாவட்­டம், ஓம­லூ­ரைச் சேர்ந்­த­வர் கல்­லூரி மாண­வ­ரான கோகுல்­ராஜ். இவர் கடந்த 2015ல் நாமக்­கல் மாவட்­டம், தொட்­டிப்­பா­ளை­யம் பகு­தி­யில் ரயில் தண்­ட­வா­ளத்­தில் பிண­மா­கக் கிடந்த நிலை­யில் மீட்­கப்­பட்­டார்.

அவர் சுவாதி என்­ப­வ­ரைக் காத­லித்­த­தா­க­வும் இந்த விவ­கா­ரத்­தில் ஆண­வக்­கொலை செய்­யப்­பட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், கோகுல்­ராஜ் கொலை வழக்­கில் பிறழ் சாட்­சி­யாக மாறிய சுவா­தியை, மதுரை உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்­க­டேஷ் ஆகி­யோர் அடங்­கிய அமர்வு முன்பு காவ­லர்­கள் நேற்று முன்­னி­லைப் படுத்­தி­னர்.

அப்­போது நீதி­ப­தி­கள், "கோகுல்­ராஜ் உங்­க­ளு­டன் படித்­தாரா? அவ­ரு­டன் பேசு­வீர்­களா?" என சுவா­தி­யி­டம் கேட்­ட­னர். அதற்கு அதி­க­மா­கப் பேசு­வேன் என சுவாதி பதி­ல­ளித்­தார்.

இத­னைத்­தொ­டர்ந்து, கோவி லுக்கு கோகுல்­ரா­ஜும் சுவா­தி­யும் வரு­வது போன்ற ஒரு காணொ­ளிக் காட்­சி­யைக் காண்­பித்து இவர்­கள் யார்? என கேள்வி எழுப்­பி­னர்.

"அந்­தக் காணொ­ளி­யில் இருப்­பது நானல்ல," எனத் தெரி­வித்த சுவாதி, பின்­னால் வரு­வது கோகுல்­ராஜ் போல் உள்­ள­தா­கக் கூறி­னார்.

மீண்­டும் காணொளி ஒளி­ப­ரப்­பப்­பட்­டது. "நீங்­கள் உண்­மை­யைச் சொல்­ல­வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் இத்­த­னை­முறை கேள்வி கேட்­கி­றோம்," என்று நீதி­ப­தி­கள் கூறி­னர். சுவாதி அது தான் அல்ல என்று கண்­ணீர் மல்க தெரி­வித்­தார்.

தொடர்ந்து நீதி­ப­தி­கள், "நீங்­கள் அழு­தா­லும் உங்­க­ளி­டம் இருந்து உண்­மையை மட்டுமே நாங்கள் எதிர்­பார்க்­கி­றோம்," என்­ற­னர்.

காணொளிக் காட்­சி­யில் கோகுல்­ரா­ஜு­டன் இருப்­பது தான் அல்ல என்று தொடர்ந்து நீங்கள் கூறி­னால், குற்­ற­வியல் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என சுவா­தியை நீதி­பதி­கள் எச்­ச­ரித்­த­னர்.

இதனிடையே, சுவாதியை வரும் புதன்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்­ன­தாக, கோகுல்­ராஜ் கொலை வழக்கு தொடர்பில் கைதான யுவ­ராஜ், அருண், சிவ­கு­மார், சதீஷ்­கு­மார், தர், ரஞ்­சித், செல்­வ­ராஜ், சந்­தி­ர­சே­க­ரன், பிரபு, கிரி­தர் ஆகிய 10 பேருக்­கும் சாகும் வரை சிறைத் தண்­டனை விதித்­தும் ஐவரை விடு­தலை செய்­தும் மதுரை மாவட்ட நீதி­மன்­றம் கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி தீர்ப்­ப­ளித்­தது.

இந்­தத் தீர்ப்பை எதிர்த்து யுவ­ராஜ் உள்­ளிட்ட 10 பேரும் தங்­க­ளுக்கு விதித்த தண்­ட­னையை ரத்து செய்­யக்­கோரி மதுரை உயர்­நீ­தி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீட்டு மனுக்­க­ளைத் தாக்­கல் செய்­த­னர்.

இம்மனுக்­களை நீதி­ப­தி­கள் ரமேஷ், ஆனந்த்­ வெங்­க­டேஷ் ஆகி­யோர் விசா­ரித்து, சுவா­தியை போது­மான பாது­காப்­பு­டன் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்த உத்­த­ர­விட்­ட­னர்.