ரூ.50 லட்சம் மதிப்பிலான விசைப்படகு கரைதட்டி சேதம்

ரூ.50 லட்சம் மதிப்பிலான விசைப்படகு கரைதட்டி சேதம்

1 mins read
160e1d9d-bb3d-44e3-8b74-db430a881699
கரைதட்டி சேதமடைந்த படகு. படம்: தகவல் ஊடகம் -

புதுச்சேரி: காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, மண்டபத்தூர், கோட்டுச்சேரிமேடு, கீழகாசாக்குடி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிரா மத்தைச்சேர்ந்த 350 விசைப் படகுகளைக் கரையோரத்தில் நிறுத்திவைப்பது வழக்கம்.

துறைமுகத்தில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தால், சிலர் தங்கள் படகுகளை அருகில் உள்ள அரசலாற்றில் பாதுகாப்பாக கட்டி வைத்திருந்தனர்.

இதேபோல் கீழகாசாக்குடி மேடு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர், ரூ.50 லட்சம் மதிப்பிலான தனது விசைப்படகை துறைமுகத்தை ஒட்டிய அரச லாற்றில் கட்டிவைத்திருந்தார்.

இந்நிலையில், கடல் சீற்றம் காரணமாக கடல்நீர் ஆறு வழியாக வேகமாகப் பாய்ந்ததில் ஆற்றில் கட்டி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு 500 மீட்டர் தூரத்துக்கு நீரில் இழுத்துச் செல்லப்பட்டு, துறைமுகத்தில் இருந்த பாராங்கல்லில் மோதி, சேதமடைந்து கடற்கரையில் தரை தட்டி நின்றது.

இத்தகவலறிந்த மீனவர்கள் மூன்று விசைப்படகுகள் மூலம் சேதமடைந்த படகை மீட்டனர்.