சென்னை: தாம்பரம் அருகே உள்ள ஒரு நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கு பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளை சுருட்டிக்கொண்டு தப்பினர்.
நேற்று அதிகாலை இந்திய நேரப்படி 5 மணி அளவில் இந்தச் சம்பவம் நடந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் சிறுவர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிறுவர்கள் மூவரும் கூட்டாகச் சேர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது காவலர்களின் விசார ணையில் தெரியவந்தது.
அவர்கள் கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கடைக்கு எதிரிலேயே தங்கி இருப்பதாகவும் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர்-வேளச்சேரி சாலையில் 'ப்ளூ ஸ்டோன்' என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த நகைக் கடைக்குச் செல்லும் தண்ணீர் குழாய் வழியாக ஏறி நகைக்கடை மாடிக்கு சென்று, அங்கிருந்து மின்தூக்கி இணைப்பு அறை வழி யாக நகைக் கடைக்குள் சென்று கைவரிசை காட்டியதும் கண்டு பிடிக்கப்பட்டது.
பாதுகாப்புப் பெட்டகத்தை அவர்கள் திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்துள்ளனர்.
திருடர்கள் உள்ளே நுழைந்த தகவல் நகைக்கடையின் உரிமை யாளர் ஜெகதீசனுக்கு அவரது கைப் பேசி மூலம் தெரியவந்துள்ளது.
இதனிடையே, நகைக்கடை கொள்ளைச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில இளையரை அவரது டி-சட்டையை அடையாளமாக வைத்து காவலர்கள் பிடித்தனர். அவர் கூறிய தகவலின் படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடு பட்ட அசாமைச் சேர்ந்த இரண்டு சிறார்களைச் சேலையூர் காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

