தேனி: தேனி மாவட்டம், உத்தம பாளையத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். கூலித் தொழிலாளி. 2019ல் தேனி புதுப் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசுப் பேருந்து மோதியது. காயமடைந்த அவர் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார். இந்த வழக்கு தேனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
சசிகுமாருக்கு 9 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வழங்க போக்கு வரத்துத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இழப்பீடு கிடைக்காததால் மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சசிகுமார்.
நீதிபதி வெங்கடேசன் விசா ரித்தார். சசிகுமாருக்கு 11 லட்சத்து 68,000 ரூபாயை இழப்பீடாக வழங்கும்படி உத்தரவிட்டார்.
போக்குவரத்துத் துறையினர் இழப்பீடு தராததால் விபத்து ஏற்படுத்திய பேருந்து தேனியில் கையகப்படுத்தப்பட்டது.

