நடிகைகளிடம் மன்னிப்பு கேட்கும்படி நீதிபதி திமுக பேச்சாளருக்கு உத்தரவு

நடிகைகளிடம் மன்னிப்பு கேட்கும்படி நீதிபதி திமுக பேச்சாளருக்கு உத்தரவு

1 mins read
b1ba5812-81f6-4644-8614-eba34750c190
-

சென்னை: நடி­கை­க­ளி­டம் மன்­னிப்­புக் கேட்­ப­து­டன், 'இனி பெண்­கள் குறித்து அவ­தூ­றா­கப் பேச­மாட்­டேன்' என பிர­மா­ணப் பத்­தி­ரத்தையும் தாக்­கல் செய்யும்படி திமுக பேச்­சா­ளர் சைதை சாதிக்­கிற்கு சென்னை உயர் நீதி­மன்­றம் உத்­தரவிட்­டுள்­ளது.

கடந்த அக்­டோ­பர் மாதம் சென்­னை­யில் நடந்த திமுக பொதுக்­கூட்­டம் ஒன்றில் பேசிய சைதை சாதிக், பாஜக நிர்­வா­கி­களும் நடி­கை­க­ளு­மான குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகி­யோரை தரக்­கு­றை­வாக விமர்­சித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்கு பல தரப்பினர் மத்தி யிலும் கண்­ட­னங்­கள் எழுந்த நிலை­யில், காவல்­து­றை­யி­லும் புகார் அளிக்­கப்­பட்­டது.

"ஒரு சக பெண்ணாகவும் மனிதராகவும் இந்தப் பேச்சுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள் கிறேன்," என திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியும் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தன்னைக் காவலர்கள் கைது செய்வதில் இருந்து தப்பித்துக் கொள்ள உயர் ­நீ­தி­மன்­றத்­தில் முன் பிணை கோரியிருந்தார் சைதை சாதிக்.

இம்மனுவை விசா­ரித்த நீதி­பதி ஜெக­தீஷ் சந்­திரா, பெண்­கள் குறித்து அவ­தூ­றான கருத்­து­களை மனு­தா­ரர் தெரிவித்து இருப்­ப­தால், அவர் பகி­ரங்க மன்­னிப்பு கோரி, பிர­மா­ணப் பத்­தி­ரம் தாக்­கல் செய்யவேண்­டும் என உத்­த­ர­விட்டு, விசா­ர­ணையை இம் மாதம் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்­துள்­ளார்.

அது­வரை சைதை சாதிக்கை கைது செய்­யக்­கூ­டாது என்­றும் நீதி­பதி உத்­த­ர­விட்­டுள்­ளார்.

இடமிருந்து: நடிகைகள் குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம். வலது: திமுக பேச்சாளர் சைதை சாதிக்.

படங்கள்: தமிழக ஊடகம்