கூடலுார்: கூடலுார் முதுமலையில், 191 இடங்களில் மொத்தம் 382 தானியங்கி படச் சாதனங்களைப் பொருத்தி புலிகள்
உள்ளிட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணியை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். படம்: தமிழக ஊடகம்)
நீலகிரி மாவட்டடம், தெப்பக்காடு, முதுமலை, கார்குடி, நெலாக்கோட்டை, மசினக்குடி வனப்பகுதிகளில் தானியங்கி படச்சாதனங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக 191 இடங்களில் தலா இரு தானியங்கி சாதனங்கள் பொருத்தும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். அந்தச் சாதனங்களில் பதிவாகும் படங்கள், காணொளிகளைப் பதிவிறக்கம் செய்து, ஆய்வு செய்யப்படும்.
இப்பணி, 40 நாள்கள் நடக்கிறது. இரண்டாம் கட்டமாக முதுமலை வெளிவட்டப் பகுதியில் கணக்கெடுப்புப் பணி நடக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

