டிசம்பர் 4ல் முதல்வர் டெல்லி பயணம்

டிசம்பர் 4ல் முதல்வர் டெல்லி பயணம்

1 mins read
f27a2115-d2a0-4176-837f-57bb77e5d03c
-

சென்னை: தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், டிசம்பர் 4ஆம் தேதி புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தியாவில் அடுத்த ஆண்டில் நடக்க உள்ள ஜி-20 மாநாடு முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்க டிசம்பர் 5ஆம் தேதி டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் அந்த டெல்லி பயணத்தை மேற்கொள்கிறார்.

பிரதமரைச் சந்தித்து தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க முதலமைச்சர் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.