இந்தியாவில் தமிழ்நாடுதான் தொழில்கள் பெருகும் மாநிலம்

இந்தியாவில் தமிழ்நாடுதான் தொழில்கள் பெருகும் மாநிலம்

2 mins read
b227d850-0212-49a6-b902-755bfeaf6ad6
தொழிலதிபர்கள், நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று அந்த மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். சென்னை ஃபெரும்புத்தூரில் செயல்படும் ஓர் ஆலை. படம்: ஊடகம் -

'எல்லா மாநிலங்களையும் விஞ்சிவிட்டது; நாட்டின் தொழிற்சாலைகளில் 15% தமிழகத்தில்'

புது­டெல்லி: இந்­தி­யா­வி­லேயே தமிழ்­நாடுதான் ஆக அதிக தொழில் பெருக்க மாநி­ல­மா­கத் திகழ்­கிறது என்று ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அண்­மை­யில் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்து இருக்­கிறது.

அந்த மாநி­லத்­தில் மொத்­தம் 38,877 தொழிற்­சா­லை­கள் இயங்கு­கின்­றன. இந்­தி­யா­வில் இயங்­கும் மொத்த தொழிற்­சா­லை­களில் இது 15.7% என்று அந்த வங்கி கூறி­ இருக்­கிறது.

இந்­தி­யா­வி­லேயே தொழில் பெருக்­கத்­தைப் பொறுத்­த­வரை தமிழ்­நாட்டை மிஞ்­சும் வேறு மாநிலம் இப்­போது இல்லை என்று அது அந்த அறிக்­கை­யில் குறிப்பிட்டு இருக்­கிறது.

குஜ­ராத்­தில் மொத்­தம் 28,479 தொழிற்­சா­லை­கள் செயல்­ப­டு­கின்றன. இந்த மாநி­லத்­தில் கடந்த 10 ஆண்­டு­களில் தொழிற்­சா­லை­களின் எண்­ணிக்கை 82% கூடி வந்­தி­ருக்­கிறது.

ஆனா­லும்­கூட தமிழ்­நாட்­டை­விட குஜ­ராத்­தில் 10,000 தொழிற்­சா­லை­கள் குறை­வாகவே இருக்­கின்­றன என்று ஆர்­பிஐ தெரி­விக்­கிறது.

தமிழ்­நாட்­டில் தொழிற்­சா­லை­களின் பெருக்­கம் 45% கூடி வரு­கிறது. தொழிற்­சா­லை­க­ளின் எண்­ணிக்­கையைப் பொறுத்­த­வரை 25,610 ஆலை­க­ளு­டன் (10.3%) மகா­ராஷ்­டிரா மாநி­லம் மூன்­றா­வது இடத்­தில் இருக்­கிறது.

ஆந்­தி­ரப் பிர­தே­சத்­தில் 19,924 ஆலை­கள் செயல்­ப­டு­கின்­றன. இது 6.8% அள­வு­டன் நான்­கா­வது இடத்­தில் உள்­ளது. மொத்­தம் 19,184 (6.5%) ஆலை­க­ளு­டன் உத்­த­ரப் பிர­தே­சம் 5வது இடத்­தில் உள்­ளது.

தமிழ்­நாடு 2030வது ஆண்டு வாக்­கில் டிரில்­லி­யன் டாலர் (டிரில்­லி­யன் என்­பது மில்­லி­யன் மில்­லி­ய­னா­கும்) பொரு­ளி­ய­லைச் சாதிக்க வேண்­டும் என்று இலக்கு நிர்­ண­யித்து இருக்­கிறது.

இந்தியாவில் மட்டுமன்றி அனைத்துலக அளவிலும் முன் னணி வகிக்க தமிழ்நாடு விரும்பு கிறது. இந்த இலக்கை நிறை­வேற்றும் வகை­யில் அனைத்­து­லக முத­லீ­டு­களை ஈர்க்க அந்த மாநிலம் பெரிய அள­வி­லான முயற்­சி­களை முடுக்­கி­விட்­டது.

இந்த இலக்­கைச் சாதிக்க தமிழ்­நாடு அடுத்த எட்டு ஆண்டுகளில் ரூ.45 லட்­சம் கோடி முதலீட்டை ஈர்க்க வேண்­டும் என்று அந்த மாநி­லத்­தின் தொழில்­துறை அமைச்சர் தங்­கம் தென்­ன­ரசு அண்­மை­யில் தெரி­வித்­தார். இந்­தியா 2028-2029 நிதி ஆண்­டில் $5 டிரில்­லி­யன் பொரு­ளி­யல் இலக்கை நிர்­ண­யித்து இருக்­கிறது.