செய்திக்கொத்து

சங் இலக்கியங்களை மொழிபெயர்க்கும் பணி தீவிரம்

புதுடெல்லி: சங்க இலக்கியங்களை இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் மொழிபெயர்த்து, தமிழின் பெருமையை உலகறியச் செய்வது மத்திய அரசின் நோக்கம். அந்தப் பணியைச் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் செய்து வருகிறது.

தொல்காப்பிய இலக்கண நூல் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதால், வடமாநிலங்களில் ஒப்பிலக்கண ஆய்வுக்கு அது பயன்படுத்தப்படுகிறது என்று சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் சந்திரசேகர் தெரிவித்தார்.

வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை ஒட்டி செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இந்த விவரங்களை வெளியிட்டார்.

பசுமாடுகள், பால் உற்பத்தி பாதிப்பு

தர்மபுரி பாலக்கோடு பகுதியில் மாடுகளுக்கு ஒரு வகை தோல் நோய் ஏற்பட்டு பரவிவருவதாகவம் பசு மாடுகள் பாதிக்கப்படுவதால் பால் உற்பத்தி மிகவும் குறைந்து விட்டதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

ஊசிமருந்துடன் மருத்துவர்களை அனுப்பி சிகிச்சை அளிக்குமாறும் கால்நடை முகாம்களை நடத்தி உடனே உதவும்படியும் அவர்கள் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டனர். படம்: தமிழக ஊடகம்

தமிழ்நாட்டில் டிசம்பர் 8 வரை மழை வழக்கத்தைவிட குறையும்

சென்னை: தமிழ்நாட்டிலும் புதுவையிலும் டிசம்பர் 8ஆம் தேதிவரை, அடுத்த இரண்டு வாரங்களில் வழக்கத்தைவிட குறைவாகவே மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகம் புதுவையில், கடந்த 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட வெகு குறைவாக பதிவாகி உள்ளது. கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் இயல்பை விட 17% அதிகமாக மழை பெய்து இருந்த நிலையில், இது கடந்த வாரம் 4% ஆகக் குறைந்துள்ளது என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!