195 ஏக்கர் கோயில் நிலம் மீட்பு

1 mins read
c76e72cc-ff93-4b97-a7c0-8900c79a659d
-

காஞ்­சி­பு­ரம்: தமிழ்­நாட்­டில் அற­நிலை­யத்­துறை கட்­டுப்­பாட்­டில் உள்ள கோடிக்­கணக்­கான மதிப்­பீட்­டில் உள்ள கோவில் நிலங்­கள் மீட்­கப்­பட்டு வரு­கிறது.

அந்த வகை­யில், காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு மாவட்­டங்­களில் ஓராண்­டில் 195 ஏக்­கர் கோவில் நிலம் மீட்­கப்­பட்­டுள்­ளது என்று காஞ்­சி­பு­ரம் மண்­டல அற­நி­லை­யத்­துறை இணை ஆணை­யர் வான்­மதி தெரி­வித்­துள்­ளார்.

இந்த ஆண்­டில் காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு மாவட்­டங்­களில் உள்ள 17 கோவில்­க­ளுக்குச் சொந்­த­மான ரூ.1,589 கோடி மதிப்­புள்ள 195 ஏக்­கர் நிலங்­கள் மீட்­கப்­பட்­டதாக அவர் கூறினார்.