‘தமிழக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய மேலும் பல தொல்லியல் ஆய்வுகள் தேவை’

விரு­து­ந­கர்: தமி­ழ­கத்­தின் வர­லாற்றை மீட்­டு­ரு­வாக்­கம் செய்ய, மேலும் பல இடங்­களில் தொல்­லி­யல் ஆய்­வுப்­ப­ணி­க­ளைத் தொடங்க வேண்­டும் என்­றும் இதற்கு மத்திய அரசு உரிய ஏற்­பா­டு­க­ளைச் செய்ய வேண்­டும் என்­றும் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு வலி­யு­றுத்தி உள்­ளார்.

விரு­து­ந­க­ரில் நடை­பெற்ற நூல் வெளி­யீட்டு விழா­வில் கலந்து கொண்டு பேசிய அவர், விரு­து­நகர் மாவட்­டம் வர­லாற்றுப் பதி­வு­களில் தன்­னு­டைய தடத்தை அழுத்­த­மாக பதித்த மாவட்­டம் என்­றார்.

சுமார் நான்­கா­யி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முன்­பி­ருந்து மக்­கள் வசிக்­கும் பகு­தி­யாக, பண்­பாட்டு தொடர்ச்­சி­யாக இன்­றைக்­கும் அம்­மா­வட்­டம் திகழ்ந்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், விரு­து­ந­கர் மாவட்­டத்­தில் வர­லாற்­றுச் செய்­தி­கள் ஏரா­ள­மாக உள்­ளன என்­றார்.

"தமி­ழ­கத்­தில் மேலும், பல புதிய இடங்­களில் தொல்­லியல் துறை ஆய்வு நடை­பெற வேண்­டும். இது­குறித்து மத்­திய தொல்­லி­யல் துறைக்கு கோரிக்கை விடுக்கப்படும்.

"குறிப்­பாக, பொற்­ப­னைக்­கோட்­டை­யில் தமி­ழக அர­சின் சார்­பில், தொல்­லி­யல் ஆய்வு நடை­பெற வேண்­டும் என்ற கோரிக்­கை­யும் இடம்­பெ­றும்.

இத­னால், தமி­ழ­கத்­தின் வர­லாறு மீட்­டு­ரு­வாக்­கம் செய்­யப்­படும். இந்­தி­யா­வின் வர­லாற்றை, தென்­கோ­டி­யி­லி­ருந்து எழு­தும் முயற்­சி­யில் ஆய்­வா­ளர்­கள் ஈடு­பட வேண்­டும்," என்­றார் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு.

தமி­ழ­கத்­தில் கீழடி உட்­பட பல்­வேறு பகு­தி­களில் நடை­பெ­றும் ஆய்வு நட­வ­டிக்­கை­க­ளின்­போது பல்­வேறு அரிய பொருள்­கள் கிடைத்து வரு­கின்­றன.

இதை­ய­டுத்து, தமி­ழ­கத்­தின் வரலாற்­றில் முக்­கி­யத்­து­வம் வாய்ந்த பகு­தி­களில் தொல்­லி­யல் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட வேண்­டும் என சமூக ஆர்­வ­லர்­கள் பல­ரும் வலியுறுத்­து­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!