சென்னை, மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பலகை பாதையை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திறந்து வைத்தார். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் கடல் அலைகள் வரை சென்று, அதன் அழகை ரசித்து, தங்கள் கால்களை நனைத்து திரும்ப முடியும். ஏற்கெனவே கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி அவர்கள் மெரினா கடல் அலையின் அழகைக் கண்டு களிப்பதற்கு வசதியாக மரப்பலகையால் ஆன தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, நிரந்தர பாதை அமைக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, 'சிங்கார சென்னை' திட்டத்தின் கீழ், ரூ. 1.14 கோடி மதிப்பீட்டில் மரப்பலகைகளால் ஆன நிரந்திர பாதை அமைக்கப்பட்டுள்ளது.
படம்: தமிழக தகவல் ஊடகம்

