ஜெயக்குமார்: ஓபிஎஸ், தினகரனுக்கு இடம் இல்லை

ஜெயக்குமார்: ஓபிஎஸ், தினகரனுக்கு இடம் இல்லை

2 mins read
9a14dd9c-ca78-4d14-b30b-14d4a3a9dc95
(இடமிருந்து) பழனிசாமி, ஓபிஎஸ், தினகரன். படங்கள்: ஊடகம் -

சென்னை: ஓ.பன்­னீர்­செல்­வம், டிடிவி.தின­க­ரன் ஆகிய இரு­வ­ரை­யும் அதி­மு­க­வில் மீண்­டும் இணைத்­துக்­கொள்ள வாய்ப்பே இல்லை என அதி­முக முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மை­யில் அதி­முக சரி­யான பாதை­யில் சென்று கொண்­டி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

எதிர்­வ­ரும் 5ஆம் தேதி அன்று, மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் நினைவு நாளை­யொட்டி அஞ்­சலி செலுத்­தும் நிகழ்வு நடை­பெற உள்­ளது.

இதில், பழ­னி­சாமி தலை­மை­யில் அதி­முக நிர்­வா­கி­கள் ஜெய­ல­லி­தா­வின் நினை­வி­டத்­தில் மலர் தூவி அஞ்­சலி செலுத்த உள்­ள­னர்.

அன்று மாலை அதி­முக சார்­பில் நடை­பெ­றும் மற்­றொரு நிகழ்­வுக்கு எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மை­யேற்­பார் என்­றும் அந்­நி­கழ்­வில் ஓ.பன்­னீர்­செல்­வம், டிடிவி.தின­க­ரன் ஆகி­யோ­ரும் பங்­கேற்க உள்­ள­தா­க­வும் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இதன் மூலம் பிள­வு­பட்­டுள்ள அதி­முக, மீண்­டும் இணை­வ­தற்­கான முதல் அடி எடுத்து வைக்­கப்­பட இருப்­ப­தா­க­வும் மிக விரை­வில் சசி­க­லா­வும் அதி­மு­க­வில் அதி­கா­ர­பூர்­வ­மாக இணை­வார் என்­றும் ஊட­கங்­களில் ஆரு­டச் செய்­தி­கள் வெளி­யாகி உள்­ளன.

நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார், டிடிவி.தின­க­ரன் மீண்­டும் அதி­மு­க­வில் இணைய வாய்ப்­பில்லை என்­றார்.

"ஓபி­எஸ், தின­க­ரன் குறித்து செய்­தி­யா­ளர்­கள் தொடர்ந்து கேள்­வி­களை எழுப்பி வரு­கி­றீர்­கள். அவற்­றுக்கு பதில் அளித்து, புளித்­துப் போய்­விட்­டது. அது முடிந்து போன கதை. தொட­ரும் கதை அல்ல. அவ்­வாறு நடக்க வாய்ப்பே இல்லை என்று எடப்­பாடி பழ­னி­சா­மியே கூறி­விட்­டார்," என்று ஜெயக்­கு­மார் மேலும் கூறி­னார்.

எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்­குள் பல்­வேறு அணி­க­ளாக பிரிந்­து­கி­டக்­கும் அதி­மு­கவை ஒருங்­கி­ணைத்து பெரும் கூட்­ட­ணியை அமைக்க பாஜக திட்­ட­மிட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், ஜெயக்­கு­மார் தெரி­வித்த கருத்து அதி­முக, பாஜக வட்­டா­ரங்­களில் சல­ச­லப்பை ஏற்­படுத்­தி­யுள்­ளது.