செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
55b0c609-71f8-4f0e-ba28-2941d8a6a5d1
-

2.99 லட்சம் பேர் தேர்வு எழுதினர்

சென்னை: தமிழகம் முழுவதும் காவல்துறை பணிக்கான எழுத்து தேர்வை சுமார் 2.99 லட்சம் பேர் எழுதி உள்ளனர். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகளும் பங்கேற்றனர். காவல் துறையில் 3,552 இரண்டாம் நிலை காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான தேர்வுதான் நடந்து முடிந்துள்ளது. இதற்கு 366,727 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

புதிய வகை போதைப் பொருளுடன் அசாம் இளையர்கள் இருவர் கைது

கோவை: காவல்துறையினர் மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது கோவையில் புதிய வகை போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு இளையர்கள் கைதாகினர். இருவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர். சிறிய அளவிலான குப்பிகளில் ஆரஞ்சு நிறத்திலான பெயர் தெரியாத 300 மில்லி கிராம் எடை கொண்ட போதைப் பொருளை இருவரும் சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

கடும் பனி: விமானச் சேவை பாதிப்பு

சென்னை: கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் கடந்த இரு நாள்களாக விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. நேற்று முன்தினம் காலை சென்னை வந்த மூன்று விமானங்கள் பெங்களூரு, ஹைதராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டன. சென்னை புறநகர்ப் பகுதிகளில் காலை ஆறு மணியளவில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் விமானங்களை தரையிறக்க முடியவில்லை. இதேபோல் சென்னையில் இருந்து புறப்பட்ட எட்டு விமானங்கள் நேற்று முன்தினம் அரைமணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.