‘எங்கும் அறிவியல், யாவும் கணிதம்’ என்ற முழக்கத்துடன் ‘வானவில் மன்றம்’ தொடக்கம்

திருச்சி: பள்ளி மாண­வர்­க­ளின் கற்­றல் திறனை மேம்­ப­டுத்­த­வும் அறி­வி­யல், கணித ஆர்­வத்­தைத் தூண்­டும் வகை­யி­லும் 'வான­வில் மன்­றம்' என்ற புதிய திட்­டத்தை தமி­ழக அரசு தொடங்கி உள்­ளது.

'எங்­கும் அறி­வி­யல் யாவும் கணி­தம்' என்ற முழக்­கத்­து­டன் அம­லுக்கு வந்­துள்ள இந்­தத் திட்­டம், மாண­வர்­க­ளுக்கு பெரி­தும் கைகொ­டுக்­கும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

அர­சுப் பள்ளி மாண­வர்­க­ளி­டையே அறி­வி­யல் மனப்­பான்­மையை வளர்க்­க­வும் எதை­யும் ஆராய்ந்­துப் பார்த்து கேள்வி கேட்­கும் பழக்­கத்தை உரு­வாக்­க­வும் அறி­வி­யல், கணி­தம் தொடர்­பாக புதி­ய­வற்றை அறிந்­து­கொள்­ளும் எல்­லை­யில்லா ஆர்­வத்தை உண்­டாக்­க­வும் இம்­மன்­றம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­தார்.

"அர­சுப் பள்­ளி­களில் ஆறு முதல் எட்­டாம் வகுப்பு வரை பயி­லும் மாண­வர்­க­ளுக்கு அறி­வி­ய­லை­யும் கணி­தத்­தை­யும் கற்­றுத் தரும் ஆசி­ரி­யர்­க­ளுக்­காக இத்­திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

"கற்­பித்­த­லில் இது­வரை அவர்­கள் கையாண்ட வழி­மு­றை­களை பகிர்ந்து கொள்­வ­தற்­கும் இத்­திட்­டத்தை தொடர்ந்து செயல்­ப­டுத்­திட ஆலோ­ச­னை­கள் வழங்­கு­வ­தற்­கும் மாநி­லம் முழு­வ­தும் இத்­திட்­டத்­தில் பங்கு பெற விருப்­பம் தெரி­வித்த ஆசி­ரி­யர்­க­ளுக்கு சிறப்­புப் பயிற்சி அளிக்­கப்­பட்­டுள்­ளது," என தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

இந்­தப் புதிய திட்­டத்­தின் மூலம் அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தம் ஆகி­யவை தொடர்­பில் மாண­வர்­க­ளின் அறி­வாற்­றலை வளர்த்­தெ­டுக்­கும் வகை­யில் நட­மா­டும் ஆய்­வுக் கூடங்­கள் செயல்­படும் என்­றும் அர­சுத் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், மாநி­லம் முழு­வ­தும் உள்ள 13,000 பள்­ளி­க­ளைச் சேர்ந்த 25 லட்­சம் மாண­வர்­கள் இதன் மூலம் பய­ன­டை­வர் என்­றும் தமி­ழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!