டிசம்பர் 6 வரை காவல்துறை கண்காணிப்பில் கோவை மாநகர்

டிசம்பர் 6 வரை காவல்துறை கண்காணிப்பில் கோவை மாநகர்

2 mins read
d2fea5d7-bc35-4583-be86-eec8a3387d36
வாகனச் சோதனையில் காவல்துறை. படம்: ஊடகம் -

பாதுகாப்புப் பணியில் 1,400 காவலர்கள்; தீவிர வாகனச் சோதனை

கோவை: டிசம்­பர் 6ஆம் தேதி வரை கோவை மாந­க­ரம் காவல்­துறை கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. கோவை முழு­வ­தும் காவல்­து­றை­யி­னர் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

சுமார் 1,400க்கும் மேற்­பட்ட காவ­லர்­களும் அதி­கா­ரி­களும் ஆங்­காங்கே வாக­னச் சோதனை நடத்தி வரும் நிலை­யில், சந்­தே­கத்­துக்­கு­ரிய வகை­யில் நட­மா­டு­ப­வர் உட­ன­டி­யா­கக் கைது செய்­யப்­ப­டு­கின்­ற­னர்.

கடந்த 1997ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 29ஆம் தேதி கோவை, உக்­க­டம் பகுதி அருகே போக்­கு­வ­ரத்தை ஒழுங்­கு­ப­டுத்­தும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த காவ­லர் செல்­வ­ராஜ் படு­கொலை செய்­யப்­பட்­டார்.

இதை­ய­டுத்து, கோவை­யில் வன்­முறை வெடித்­தது. அது பின்­னர் கல­வ­ர­மாக மாறி­யதை அடுத்து, ஒட்­டு­மொத்த மாந­க­ர­மும் சூறை­யா­டப்­பட்­டது. வன்­மு­றை­யில் ஈடு­பட்­ட­வர்­கள் மதக்­க­ல­வ­ரத்தை தூண்­டி­விட, ஏரா­ள­மான கடை­களும் வீடு­களும் தாக்­கு­த­லுக்கு ஆளா­கின. இந்­தக் கல­வ­ரத்­தில் 19 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

அதன் தொடர்ச்­சி­யாக 1998ஆம் ஆண்டு கோவை­யில் தொடர் குண்டு வெடிப்­புச் சம்­ப­வ­மும் நிகழ்ந்­தது.

அதி­லும் 58 பேர் கொல்­லப்­பட்­டதை அடுத்து, ஆண்­டு­தோ­றும் நவம்­பர் 29 முதல் டிசம்­பர் 6ஆம் தேதி வரை கோவை­யில் காவல்­துறை கண்­கா­ணிப்­பும் சுற்­றுக்­கா­வல் நட­வ­டிக்­கை­யும் தீவி­ர­மாக்­கப்­படும்.

அந்த வகை­யில் நடப்பு ஆண்­டி­லும் டிசம்­பர் இது­தி­வரை கோவை நக­ரம் காவல்­துறை கண்­கா­ணிப்பு வளை­யத்­துக்­குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தி­னம் கோவை மாந­கர காவல் ஆணை­யர் வே.பால­கி­ருஷ்­ணன் தலை­மை­யில் 4 துணை ஆணை­யர்­கள், உதவி ஆணையர்­கள், ஆய்­வா­ளர்­கள், உதவி ஆய்­வா­ளர்­கள், காவ­லர்­கள் என மொத்­தம் 1,476 பேர் நகரம் முழுவதும் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

உக்­க­டம், ஆத்­துப்­பா­லம் சாலை, குனி­ய­முத்­தூர், போத்­த­னூர், பெரிய கடை­வீதி, ஒப்­ப­ணக்­கார வீதி, டவுன்­ஹால் உள்­ளிட்ட மாந­க­ரின் பல்­வேறு முக்கிய இடங்­களில் காவல்­து­றை­யி­னர் பாது­காப்­புக்­காக நிறுத்­தப்­பட்­டி­ருந்­த­னர்.