ஆயிரம் இடங்களில் சுற்றுலாத் தலம்

1 mins read
6374d02e-af5d-4d58-a357-f568e216358d
-

வேலூர்: தமிழகத்தில் சுற்றுலா தலங்களாக மாற்று வதற்கு ஏற்ற ஆயிரம் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச் சர் மதிவேந்தன் தெரி வித்துள்ளார்.

இவற்றுள் முந்நூறு இடங்களில் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என அவர் கூறினார்.

"ஆண்டுதோறும் பதினைந்து இடங்களை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் அவர்.