மீண்டும் தமிழ்: இந்தி பெயர்ப் பலகை அகற்றம்

மீண்டும் தமிழ்: இந்தி பெயர்ப் பலகை அகற்றம்

1 mins read
f5806377-c23b-4bb0-b2c3-4199b06edb0b
-

திருப்­பூர்: பொது மக்­கள், சமூக அமைப்­பு­கள் கடும் கண்­ட­னம் தெரி­வித்­ததை அடுத்து, திருப்­பூர் ரயில் நிலை­யத்­தில் வைக்­கப்­பட்­டி­ருந்த இந்தி பெயர் பலகை அகற்­றப்­பட்­டது. மேலும், முன்­பு­போல் தமிழ் அறி­விப்­புப் பலகை காணப்­ப­டு­கிறது.

திருப்­பூர் ரயில் நிலை­யத்­தில் இயங்கி வரும் சேவை மையத்­துக்கு முன்பு வைக்­கப்­பட்­டுள்ள அறி­விப்­புப் பல­கை­யில் இது­நாள் வரை 'சேவை மையம்' என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், சில தினங்­க­ளுக்கு முன்பு, 'சேவை மையம்' என்­ப­தைக் குறிப்­பிட 'சக­யோக்' என்ற இந்தி வார்த்தை பெரி­தாக எழு­தப்­பட்­டது. இதையே தமிழ் எழுத்­து­க­ளைக் கொண்டு 'சக­யோக்' என்று எழுதி வைத்­துள்­ள­னர். அதே இந்தி வார்த்­தை­தான் ஆங்­கில எழுத்­து­க­ளி­லும் அந்­தப் பல­கை­யில் இடம்­பெற்­றுள்­ளது.

இதை­ய­றிந்த மொழி, சமூக ஆர்­வ­லர்­கள் கடும் கண்­ட­னம் தெரி­வித்­த­னர். தமி­ழைப் புறக்­க­ணிக்­கும் செயலை ஏற்க இய­லாது என பல்­வேறு அமைப்­பு­களும் கண்­ட­னம் தெரி­வித்­தன. இதை­ய­டுத்து, தமிழை மறைத்து இந்­தி­யில் வைக்­கப்­பட்­டி­ருந்த பெயர் பலகை அகற்­றக்­கப்­பட்­டுள்­ளது. மீண்­டும் தமிழ் வார்த்தைகள் கொண்ட அறி­விப்பு இடம் பெற்­றுள்­ளது.