ஆளுநர்: வடகிழக்கு மாநிலங்களில் தமிழ்

சென்னை: வட­கி­ழக்கு மாநி­லங்­களில் தமிழ் மொழியை விருப்ப மொழி­யாக பாடத் திட்­டத்­தில் சேர்ப்­ப­தற்­கான முயற்­சி­களை தாம் மேற்­கொண்­டுள்­ள­தாக தமி­ழக ஆளு­நர் ஆர்.என்.ரவி தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக சம்்பந்­தப்­பட்ட மாநில முதல்­வர்­க­ளி­டம் தாம் பேசி வரு­வ­தாக சென்­னை­யில் நடந்த பட்­ட­ம­ளிப்பு விழா ஒன்­றில் பங்­கேற்­றுப் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

"திருக்­கு­றளை மற்ற மாநி­லங்­க­ளின் பாடத்­திட்­டங்­களில் சேர்க்க அதை மொழி­பெ­யர்க்க வேண்­டி­யி­ருக்­கும். இதற்­கேற்ப, காசி தமிழ்ச் சங்க விழா­வில், பிர­த­மர் மோடி பல மொழி­களில் மொழி­பெ­யர்க்­கப்­பட்ட திருக்­கு­றள் புத்­த­கத்தை வெளி­யிட்­டார்," என்­றார் ஆளு­நர் ரவி.

தமி­ழ­கம் உள்­ளிட்ட பல்­வேறு மாநி­லங்­களில் இந்தி திணிப்பை எதிர்த்து பல்­வேறு போராட்­டங்­கள் நடந்து வரு­கின்­றன. தமி­ழ­கத்­தி­லும் கடும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில், தமி­ழின் தொன்மை, சிறப்­பு­கள் குறித்து வாய்ப்பு கிடைக்­கும் போதெல்­லாம் பிர­த­மர் மோடி தமது உரை­களில் சுட்­டிக்­காட்டி வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், தமி­ழக ஆளு­ந­ரும் தன் பங்­குக்கு வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளுக்கு தமிழ் மொழி­யைக் கொண்டு செல்ல தாம் முயற்சி மேற்­கொண்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!