நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ்: சட்ட அமைச்சர் உறுதி

நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ்: சட்ட அமைச்சர் உறுதி

1 mins read
e3823a72-5c19-425b-9c92-0eee5ce6bb84
Google News Preferred Icon

சென்னை: உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் நிச்சயம் இடம்பெறும் என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட ஒரு மொழியை மட்டும் திணிக்கும் நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாக சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

வருங்காலத்தில் நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளில் வட்டார மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள், அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடமும் தாம் ஏற்கெனவே கலந்தாலோசித்து உள்ளதாகவும் சட்ட அமைச்சர் தெரிவித்தார்.

"உயர் நீதிமன்றம், துணை நீதிமன்றங்களில் தமிழ் மொழி முக்கிய இடம் பெறும் என நம்புகிறேன். அச்சமயம் நாம் அனைவரும் பெருமைப்படுவோம். தமிழ் மிகச் சிறந்த மொழி. இது அனைவருக்கும் தெரியும்," என்றார் அமைச்சர் கிரண்.