சென்னை: சென்னையில் 13ஆவது உலகத் தமிழாசிரியா் மாநாடு நடைபெற்று வருகிறது. 'மரபு, பண்பாடு, கலைகள் வழி கற்றல்-கற்பித்தல்' என்ற கருப்பொருளில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மாநாடு இன்றுடன் நிறைவுபெறுகிறது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, உலகத் தமிழாசிரியா் பேரவை ஆகிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து நடத்தும் இந்த மாநாட்டின் சிறப்பு மலரை உயா்கல்வித் துறை அமைச்சா் க. பொன்முடி வெளியிட்டுப் பேசினார்.
அப்போது அவர் குறிப்பிடுகையில், "ஆசிரியா்கள் தங்களது மாணவா்களின் தமிழ்மொழி அறிவை மேம்படுத்த வேண்டும்.
"தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின்போது நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டு வருகிறது.
"பள்ளிகளில் அனைத்துக் குழந்தைகளும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிழையின்றிப் பாட தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சொல்லித்தர வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.