8 மாதத்துக்குப் போதுமான அளவில் குடிநீர்

8 மாதத்துக்குப் போதுமான அளவில் குடிநீர்

04 Dec 2022 - 5:30 am

1 mins read

சென்னை: சென்னை மற்­றும் புற­

ந­கர் பகு­தி­களில் தென்­மேற்­குப் பரு­வ­மழை காலத்­தி­லும் வட­கி­ழக்­குப் பரு­வ­மழை தொடக்­கத்­தின்­

போ­தும் நல்ல மழை பெய்­த­தால் சென்­னைக்­குக் குடி­நீர் வழங்­கும் ஏரி­களில் அதிக அளவு தண்­ணீர் இருப்பு உள்­ளது.

எட்டு மாதங்­க­ளுக்­குத் தேவை­யான தண்­ணீர் அந்த ஏரி­களில் இருப்பு உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து தமி­ழக அதி­காரி ஒரு­வர் கூறு­கை­யில், "ஆந்­தி­ரா­வில் இருந்து தமி­ழ­கத்­துக்கு 1.5 டிஎம்சி தண்­ணீர் வந்­துள்­ளது.

"வரு­கிற பிப்­ர­வரி மாதம் கண்­ட­லேறு அணை­யைப் புதுப்­பிக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. எனவே ஜன­வ­ரிக்­குள் மீத­முள்ள 6.5 டிஎம்­சி­யைப் பெற்­றுக்கொள்­ளு­மாறு ஆந்­திர அரசு கூறி உள்­ளது.

"ஆந்­திர அரசு தரும் தண்­ணீர் முழு­வ­தை­யும் சேமித்து வைப்­பது இய­லாத காரி­யம் என்­ப­தால் ஜன­வரி மாதத்­துக்­குள் 4 டிஎம்சி தண்­ணீரை மட்­டும் பெறத் திட்­ட­மிட்­டுள்­ளோம்.

"இப்­போ­தைய நில­வ­ரப்­படி, சென்­னைக்­குக் குடி­நீர் வழங்­கும் ஏரி­களில் இன்­னும் 8 மாதங்­க­ளுக்­குப் போது­மான தண்­ணீர் இருப்பு உள்­ளது", என்­றார் அந்த அதிகாரி.