கோயில்களில் கைப்பேசியை தடை செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

கோயில்களில் கைப்பேசியை தடை செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

1 mins read
764dbf54-ca75-4f4b-8d8e-667768d37937
-
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட எல்லாக் கோயில்களி லும் கைப்பேசி பயன்பாட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதனைத் தவிர கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆடை கட்டுப்பாடு குறித்தும் இந்து சமய அற நிலையத்துறை ஆணைய ருக்கு அந்த நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், கோயில் வளாகத்தில் கைப்பேசிகளைப் பாதுகாப்பாக வைக்க அறை அமைக்க ஏற்பாடு செய்யுமாறும் நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில கைப்பேசி தடை நடப்பில் உள்ளது.