டாக்டர் ராமதாஸ்: காய்கறிகளை சாலையில் கொட்டி வீணாக்குவது வேதனையளிக்கிறது

டாக்டர் ராமதாஸ்: காய்கறிகளை சாலையில் கொட்டி வீணாக்குவது வேதனையளிக்கிறது

1 mins read
a249a8aa-038a-46c9-b17a-503e60872736
-

சென்னை: தமிழ்­நாட்­டின் பல்­வேறு மாவட்­டங்­களில் வெண்­டைக்­காய், தக்­காளி உள்­ளிட்ட காய்­க­றி­ களுக்கு சந்­தை­களில் உரிய விலை கிடைக்­கா­த­தால் சாலை­களில் கொட்டி அழிக்­கப்­பட்­டது வேதனை அளிக்­கிறது என்று பா.ம.க. நிறு வனர் டாக்­டர் ராம­தாஸ் அறிக்கை வாயி­லா­கத் தெரி­வித்­துள்­ளார்.

"விவ­சா­யி­கள் வியர்வை சிந்தி சாகு­படி செய்த பயிர்­கள் யாருக்­கும் பய­னின்றி அழிக்­கப்­ப­டு­வது வேத­னை­ய­ளிக்­கிறது. கடந்த சில நாட்­க­ளாக நெல்லை சந்­தை­யில் ஒரு கிலோ வெண்­டைக்­காய் ரூ.2 என்ற மிகக்­கு­றைந்த விலைக்கே கொள்­மு­தல் செய்­யப்­ப­டு­கிறது. அத­னால் அதிர்ச்­சி­ய­டைந்த உழ­வர்­கள் சந்­தைக்கு கொண்டு வந்த பல்­லா­யி­ரம் கிலோ வெண்­டைக்­காய்­களை சாலை­யில் கொட்டி அழித்­தி­ருக்­கின்­ற­னர். கொள்­மு­தல் விலை வீழ்ச்­சி­யால் உழ­வர்­கள் பாதிக்­கப் ­ப­டு­வதை தடுக்க காய்­க­றி­கள், பழங்­க­ளுக்கு குறைந்­த­பட்ச கொள்­மு­தல் விலை நிர்­ண­யிக்­க­வும் அவற்றை கூட்­டு­றவு அமைப்­பு­கள் மூலம் அரசே கொள்­மு­தல் செய்­ய­வும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என்று அவர் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

"கூடு­த­லாக வேளாண் விளை­பொ­ருட்­கள் அதி­க­மாக விளை­யும் காலங்­களில் அவற்றை சேமித்து வைப்­ப­தற்­காக குளிர்­ப­த­னக் கிடங்­கு­களை அமைக்­க­வும் தமி­ழக அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என்­றும் அவர் ஆலோ­சனை வழங்கி­ உள்­ளார்.