அம்பேத்கருக்கு காவி உடை; சுவரொட்டியால் பரபரப்பு

அம்பேத்கருக்கு காவி உடை; சுவரொட்டியால் பரபரப்பு

1 mins read

கும்­ப­கோ­ணம்: அம்­பேத்­கர் காவி உடை அணிந்­தி­ருப்­பது போன்ற புகைப்­ப­டத்­து­டன் ஓட்­டப்­பட்­டுள்ள சுவ­ரொட்­டி­க­ளால் கும்­ப­கோ­ணத்­தில் பர­ப­ரப்பு நில­வு­கிறது. இதை­ய­டுத்து அந்­தச் சுவ­ரொட்­டியை அச்­சிட்­ட­வர் கைதா­கி­னார்.

அம்­பேத்­க­ரின் நினைவு தினம் நேற்று நாடு முழு­வ­தும் அனு­ச­ரிக்­கப்­பட்­டது. அவ­ருக்கு மரி­யாதை செலுத்­தும் வித­மாக, அவ­ரது உரு­வப் படத்­துக்­கும் சிலைக்­கும் மாலை அணி­விப்­பது உள்­ளிட்ட பல்­வேறு நிகழ்­வு­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லை­யில், கும்­ப­கோ­ணம் பகு­தி­யில் ஒட்­டப்­பட்ட சுவ­ரொட்­டி­களில் அம்­பேத்­கர் காவி உடை அணிந்து, நெற்­றி­யில் திரு­நீ­றும் குங்­கு­ம­மும் பூசி­யி­ருப்­பது போன்ற படம் இடம்­பெற்று இருந்­தது.

இந்து மக்­கள் கட்­சி­யின் மாநி­லச் செய­லர் குரு­மூர்த்தி பெயர் இந்­தச் சுவ­ரொட்­டி­களில் இடம்­பெற்­றி­ருந்­த­தால் ஒரு தரப்­பி­னர் கடும் எதிர்ப்பு தெரி­வித்­த­னர். உட­ன­டி­யாக அந்­தச் சுவ­ரொட்­டி­களை அகற்­றா­விட்­டால் பெரும் போராட்­டம் வெடிக்­கும் என அவர்­கள் எச்­ச­ரிக்கை விடுத்­த­னர்.

இது­கு­றித்து தக­வல் அறிந்த காவல்­துறை சுவ­ரொ­ட்­டி­க­ளைக் கிழித்­தெ­றிய ஏற்­பாடு செய்­த­து­டன், கும்­ப­கோ­ணம் முழு­வ­தும் பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளைப் பலப்­ப­டுத்­தி­யது.

குரு மூர்த்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.