மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது

மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது

1 mins read

சென்னை: இவ்வாண்டில் மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பியது.

மேட்டூர் அணை இவ்வாண்டு தென்மேற்குப் பருவமழை காரணமாக கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. பின்னர் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி அணை மீண்டும் நிரம்பியிருந்தது. இந்த நிலையில் தற்போது அணைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் மேட்டூர் அணை நிரம்பியது.

இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.