சென்னை பறக்கும் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு

சென்னை பறக்கும் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு

2 mins read
3381d923-2e2e-4932-b839-acaa2dc152e1
-
Google News Preferred Icon

சென்னை: சென்­னை­யில் கடற் ­க­ரைக்­கும் வேளச்­சே­ரிக்­கும் இடை­யி­லான பறக்­கும் ரெயில் நிலை­யங்­களை சீரமைக்கும் பணிகள் விரை­வில் தொடங்கப் படவுள்ளன.

முறை­யான பரா­ம­ரிப்பு இல்­லா­த­தால் மின்­தூக்கி, மின்­ப­டி­கள் உள்­ளிட்டவை இயங்­கா­மல் செய­லி­ழந்­துள்­ளன.

ரயில் நிலை­யங்­களில் உள்ள கழி­வ­றை­கள் சீர­மைக்­கப்­ப­டா­த­தால் மூடப்­பட்­டுள்­ளன. பல இடங்­களில் மின்­வி­ளக்­கு­கள் எரி­யா­மல் உள்­ளன. இத­னால் பய­ணி­கள் அச்­சத்­து­டன் செல்­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் உட­ன­டி­யாக பறக்­கும் ரயில் நிலை­யங்­களை மேம்­ப­டுத்த வேண்­டும் என்று பய­ணி­கள் மற்­றும் பல்­வேறு அமைப்­பு­கள் சார்­பில் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

இத­னால் பறக்­கும் ரயில் நிலை­யங்­களை மேம்­ப­டுத்­தும் பணி­களை சென்னை ஒருங்­கி­ணைந்த போக்­கு­வ­ரத்­துக் குழு­மம் மேற்­கொள்­ள­வி­ருக்­கிறது.

இதில் ரயில்களுக்கு புதிய இயந்­தி­ரம், 'குளிர்சாதன' வசதி கொண்ட பெட்­டி­கள், வணிக வளா­கங்­கள், உண­வ­கங்­கள், வாகன நிறுத்­துமிடங்கள் போன்ற பல்­வேறு நவீன வச­தி­கள் செய்­யப்­பட உள்­ளன.

இது குறித்து விளக்­கம் அளித்த ரயில்வே அதி­காரி ஒரு­வர், 'பறக்­கும் ரயில்­கள்' தெற்கு ரயில்வே சார்­பில் இயக்­கப்­ப­டு­கிறது.

ரயில் நிலைய கட்­ட­டங்­கள் மிக­வும் பழ­மை­யாக உள்­ளன. பய­ணி­க­ளுக்கு பாது­காப்புக் குறை­பாடு உள்­ளது. இத­னால் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை குறை­வாக உள்­ளது. எனவே பறக்­கும் ரயில் நிலை ­யங்­களை மேம்­ப­டுத்த ஆலோ­சிக்­கப்­பட்­டது. சென்னை மெட்ரோ ரயில் நிறு­வ­னம், பறக்­கும் ரயில்­களை இயக்­கு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இதில் புதிய இயந்­தி­ரம், 'ஏசி கோச்' பெட்­டி­கள் பய­ணி­கள் வச­திக்­காக விரை­வில் அமைக்­கப்­பட உள்­ளது. வணிக வளா­கங்­கள், உண­வ­கங்­கள், வாகன நிறுத்­தும் இடங்­கள் உள்­ளிட்ட வச­தி­களும் இடம்­பெ­ற­வுள்­ளன என்­றார். ரயில் நிலை­யங்­களை மேம்­ப­டுத்­து­வ­தன் மூலம் பறக்­கும் ரெயில் நிலை­யத்துக்கு வரும் பய­ணி­கள் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என்று அந்த பேச்­சா­ளர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.