மின் இணைப்புடன் இணைக்க ஆதார் எண் சேகரிப்புப் பணி: ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பு

மின் இணைப்புடன் இணைக்க ஆதார் எண் சேகரிப்புப் பணி: ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பு

1 mins read

சென்னை: மின் இணைப்­பு­டன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரிய ஊழி­யர்­கள், நுகர்­வோர் வீடு­க­ளுக்­குச் சென்று விவ­ரம் சேகரிக்க வேண்­டும் என்­பதை ஏற்க இய­லாது என மின்­வா­ரிய ஊழி­யர் சங்­கம் வலி­யு­றுத்தி உள்­ளது.

இது தொடர்­பாக ஊழி­யர்­களுக்குப் பிறப்­பிக்­கப்­பட்ட உத்தரவை திரும்­பப் பெற வேண்­டும் என அச்­சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

ஊழி­யர்­கள் தங்­க­ளது அன்றாடப் பணி­களை முடக்­கி­விட்டு ஆதார் இணைப்­புக்கு முக்­கி­யத்­து­வம் அளித்து வீதி­வீ­தி­யாக அலைய வைப்­பதை ஏற்க முடி­யாது என்­றும் களப்­பி­ரி­வி­லும் கணக்­கீட்­டுப் பிரி­வி­லும் ஆள் பற்­றாக்­குறை உள்ள நிலை­யில், நாள்­தோ­றும் கடும் பணிச்­சு­மை­யு­ட­னும் மன­அ­ழுத்­தத்­து­ட­னும் ஊழி­யர்கள் பணி­பு­ரிந்து வரு­கின்­ற­னர் என்­றும் அச்­சங்­கத்­தின் செய­லா­ளர் எஸ்.கண்­ணன் கூறி­யுள்­ளார்.

ஏற்­கெ­னவே, மின்­வா­ரியப் பிரிவு அலு­வ­ல­கங்­களில் மின்­இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்­கள் அமைக்­கப்­பட்டு பணி­கள் நடை­பெற்று வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள எஸ்.கண்­ணன், ஊழி­யர்­கள் வீடு­வீடா­கச் சென்று மின்­நு­கர்­வோ­ரி­டம் ஆதார் எண்ணை பெற்று வந்து கணி­னி­யில் பதி­வேற்­றம் செய்­திடு­மாறு வாய்­மொ­ழி­யாக உத்­த­ர­விட்­டுள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

"வாய்­மொழி உத்­த­ர­வு­கள் மூலம் ஊழி­யர்­களை கொத்­த­டி­மை­க­ளாக பணி­யாற்ற வைக்க நிர்­வா­கம் நினைத்­தால், அதை எதிர்த்து ஊழி­யர்­கள் போராட வேண்­டி­யி­ருக்­கும். எனவே, இது­போன்ற முயற்­சி­களைக் கைவிட வேண்­டு­ம்," என எஸ்.கண்­ணன் மேலும் தெரி­வித்­துள்­ளார்.