கைதிகளைக் கண்காணிக்க காவலர்கள் சீருடையில் கேமரா

கைதிகளைக் கண்காணிக்க காவலர்கள் சீருடையில் கேமரா

10 Dec 2022 - 5:30 am

1 mins read

சென்னை: உயர் பாதுகாப்பு கொண்ட சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள ஆபத்தான கைதிகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தங்களது சீரு டையில் அணிந்துகொள்ளும் வகையில் கண்காணிப்புக் ேகமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக சென்னை புழல் மத்திய சிறைக்காவலர்களுக்கு இந்தக் கேமராக்கள் வழங்கப்பட்டு உள்ள நிலையில், படிப்படியாக அனைத்து மத்திய சிறைகளில் பணியாற்றும் காவலர்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்காக 49 லட்சம் ரூபாய் செலவில் கேமராக்கள் வாங்கப் பட்டு, முதல் கட்டமாக புழல் சிறைக் காவலர்களுக்கு நேற்று வழங்கப் பட்டன. இந்தக் கேமராக்கள் சிறைக் கண்காணிப்பு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக புதுக்கோட்டை காவலர்களுக்கு மேகராக்கள் வழங்கப்பட உள்ளன.

இந்தக் கேமராக்களில் படம் பிடிக்கப்படும் காணொளிக் காட்சி களைச் சிறையின் தலைமையகக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதிகளுக்கு படிப்பு, தொழில் எனப் பல வசதிகளும் சிறைத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் புஜாரி பொறுப்பேற்ற பின்னர், சிறைக்கைதிகளுக்கு பல்வேறு உதவிகளையும் அமல்படுத்தி வருகிறார். உறவினர்களிடம் கைதிகள் எளிமையாகப் பேசும் வகையில் 'இண்டர்காம்' வசதியும் கைதிகள் வெளியே சென்றவுடன் அவர்களுக்கு எளிதாக வேலை கிடைக்கும் வகையில் ஆதார் கார்டு வழங்கும் திட்டமும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.