தமிழகத்தில் குற்றச்செயல்கள் 15% குறைந்துவிட்டன: டிஜிபி

தமிழகத்தில் குற்றச்செயல்கள் 15% குறைந்துவிட்டன: டிஜிபி

2 mins read

கோவை: தமி­ழ­கத்­தில் குற்­றங்களின் எண்­ணிக்கை சுமார் 15 விழுக்­காடு குறைந்­துள்­ள­தாக காவல்­துறை தலை­வர் டிஜிபி சைலேந்­திர பாபு தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் சட்­டம், ஒழுங்கு நிலை குறித்து கோவை­யில் செய்தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், ஒரு குறிப்­பிட்ட பகு­தி­யில் குற்­றங்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­தால்­தான் அங்கு சட்­டம், ஒழுங்கு சிறப்­பாக இருக்­கிறது என்று கூற முடி­யும் என்று குறிப்­பிட்­டார்.

"கடந்த ஆண்டு 1,597 கொலைச் சம்­ப­வங்­கள் பதி­வாகி உள்­ளன. நடப்­பாண்­டில் கொலை­க­ளின் எண்­ணிக்கை 1,368ஆகக் குறைந்­துள்­ளது. ஒட்­டு­மொத்­தத்­தில் 15 விழுக்­காடு அள­வில் கொலைக் குற்­றங்­கள் குறைந்­துள்­ளன.

"அதே­போல் கடந்த ஆண்டு ஆதாய கொலை­க­ளின் எண்­ணிக்கை 89ஆக பதி­வான நிலை­யில், நடப்­பாண்­டில் அது 79ஆகக் குறைந்­துள்­ளது. மேலும், கொள்ளை வழக்­கு­க­ளின் எண்­ணிக்கை 111ல் இருந்து 96ஆகக் குறைந்­துள்­ளது," என்று டிஜிபி சைலேந்­தி­ர­பாபு விவரங்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டார்.

தமி­ழ­கம் முழு­வ­தும் கண்­காணிப்பு சாதனங்­கள் பொருத்தும் நட­வ­டிக்கை தீவி­ர­ம­டைந்­துள்­ள­தாகக் குறிப்­பிட்ட அவர், இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் பெரிய குற்­றங்­களைக் கண்­ட­றிய உத­வு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

மாநி­லம் கடந்து வந்து குற்­றச் செயல்­களில் ஈடு­ப­டு­ப­வர்­களை தமிழ­க காவல்­துறை கண்­கா­ணித்து வரு­வ­தா­க­வும் பிற மாநி­லங்­களில் இருந்து மருத்­து­வக் கழி­வு­க­ளைக் கொண்டு வந்து தமி­ழ­கத்­தில் கொட்டு­வதைத் தடுக்க உரிய நட­வடிக்­கை­கள் மேற்­கொள்­ளப்பட்டு வரு­வ­தா­க­வும் காவல்­துறை தலைவர் குறிப்­பிட்­டார்.

கேர­ளா­வில் இருந்து எல்லை கடந்து வந்து தமி­ழ­கத்­தில் உயிரி மருத்­து­வக் கழி­வு­களைக் கொட்­டிச் செல்­கி­றார்­கள். இதைத் தடுக்க எல்­லை­யில் ஆறு சோத­னைச் சாவடி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. தென்­காசி, பொள்­ளாச்சி, கன்­னியாகு­மரி பகு­தி­களில் இது தொடர்­பான கண்­கா­ணிப்பு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

"வெளி மாநில வாக­னங்­க­ளைக் கண்­கா­ணிக்க சுங்­கச் சாவ­டி­யில் நவீன சாதனங்­கள் பொருத்­தும் பணி­களும் நடந்து வரு­கின்­றன," என்­றார் டிஜிபி சைலேந்­தி­ர­பாபு.

தற்­போது இணை­ய­வழி குற்றங்கள் அதி­க­ரித்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், இதுதொடர்­பாக தமிழகத்­தில் 45 ஆயி­ரம் வழக்­கு­கள் பதி­வாகி உள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.