காணிக்கை செலுத்த திருப்பதி சென்ற மக்கள்; வெறிச்சோடிப்போன கிராமம்

காணிக்கை செலுத்த திருப்பதி சென்ற மக்கள்; வெறிச்சோடிப்போன கிராமம்

1 mins read
f69bc403-0ca9-4b76-a585-51ddc269bb5c
-

தர்­மபுரி: ஒட்­டு­மொத்த கிராம மக்­களும் திருப்­பதி கோவி­லுக்குக் கிளம்­பிச் சென்­ற­தால் தர்­ம­புரி காவல்­து­றை­யி­னர் அதிர்ச்சி அடைந்­த­னர்.

தர்­ம­புரி மாவட்­டம், வசந்­த­புரம் கிராம மக்­கள்­தான் இவ்­வாறு திருப்பதி சென்­றுள்­ள­னர்.

நான்கு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை இவ்­வாறு திருப்பதிக்குச் செல்­வதை வழக்­க­மாக வைத்துள்­ள ­தாக அம்­மக்­கள் தெரி­வித்­துள்ளனர்.

இக்­கி­ரா­மத்­தில் நானூறுக்கும் மேற்­பட்ட குடும்­பங்­கள் வசிக்கின்றன. அக்­கு­டும்­பங்­களைச் சேர்ந்­த­வர்­கள் அனை­வ­ரும் ஒன்­றாகக் கிளம்­பிச் சென்­ற­தால், மொத்த கிரா­மமே வெறிச்­சோ­டிக் காணப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து வசந்­த­பு­ரம் கிராமத்­துக்குக் கூடு­தல் பாது­காப்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் கிராம மக்­கள் ஊர் திரும்­பும் வரை பாது­காப்பு ஏற்­பா­டு­கள் நீடிக்­கும் என்­றும் காவல்­துறை தரப்­பில் தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­முறை 400 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த, 900 பேர் மொத்­த­மாக 20 வாக­னங்­களில் திருப்­ப­திக்­குச் சென்­றுள்­ள­னர்.

அங்கு கோவிலில் காணிக்கை செலுத்திய பிறகு அவர்கள் ஊர் திரும்ப உள்ளனர்.