பாடத்திட்டத்தில் திருக்குறள்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்து

பாடத்திட்டத்தில் திருக்குறள்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்து

2 mins read

'108 அதிகாரங்களை மட்டும் சேர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'

சென்னை: தமி­ழ­கப் பள்­ளி­களில் ஆறு முதல் பனி­ரெண்­டாம் வகுப்பு வரை­யி­லான பாடத் திட்­டங்­களில் திருக்­கு­ற­ளின் 108 அதி­கா­ரங்­க­ளை­யும் சேர்க்க வேண்­டும் என தமி­ழக அர­சுக்கு நீதி­மன்­றம் உத்­த­ர ­விட்­டுள்­ளது.

இது தொடர்­பாக ஏற்­கெ­னவே நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்ள போதி­லும், தமி­ழக அரசு அதைச் செயல்­ப­டுத்­த­வில்லை என மதுரை உயர் நீதி­மன்­றக் கிளை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

108 அதி­கா­ரங்­களில் உள்ள குறள்­களை பள்­ளி­களில் கற்­பிக்க ஏற்­கெ­னவே உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ள­தாக நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர்.

இது தொடர்­பாக ராம்­கு­மார் என்­ப­வர் பொது­நல வழக்கு ஒன்றை உயர் நீதி­மன்­றக் கிளை­யில் தொடுத்­தி­ருந்­தார். அதன் மீதான விசா­ரணை நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது.

அப்­போது, கடந்த 2016ஆம் ஆண்டு நடை­பெற்ற ஒரு வழக்கு விசா­ர­ணை­யின்­போது நடந்­த­வற்றை ராம்­கு­மார் தரப்பு குறிப்­பிட்­டது.

திருக்­கு­ற­ளில் உள்ள காமத்­துப்­பா­லைத் தவிர்த்து அறத்­துப்­பால், பொருட்­பா­லில் உள்ள 108 அதி­கா­ரங்­களும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை­யி­லான பாடத்­திட்­டத்­தில் சேர்க்­கப்­பட வேண்­டும் என்­றும் அதற்­கான நட­வ­டிக்­கை­களை தமி­ழக அரசு மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் உயர் நீதி­மன்­றக் கிளை 2016ஆம் ஆண்டு உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

ஆனால் அவ்­வாறு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என மனு­தா­ரர் ராம்­கு­மார் தமது மனு­வில் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

"108 அதி­கா­ரங்­களில் உள்ள குறள்­களை, கற்­பிக்க தமி­ழக அரசு நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. தற்­போது 30 முதல் 60 திருக்­கு­றள் மட்­டுமே பாடத்­திட்­டத்­தில் இடம்­பெற்­றுள்­ளன," என்று ராம்­கு­மார் தரப்­பில் வாதம் முன்­வைக்­கப்­பட்­டது.

அண்­மைய விசா­ர­ணை­யின்­போ­தும் ராம்­கு­மார் தரப்பு இதைச் சுட்­டிக்­காட்­டி­யது.

இதை­ய­டுத்து, இந்த வழக்கு தொடர்­பாக தமி­ழக அரசு மூன்று மாதங்­களில் உரிய விளக்­கம் அளிக்க வேண்­டும் என நீதி­ப­தி­கள் உத்­த­ர­விட்­டுள்­ள­னர்.