சென்னை: வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள ஏழு பழங்காலச் சிலைகளை சென்னையில் காவல்துறையினர் மீட்டனர்.
சென்னை ஆர்ஏ புரத்தில் உள்ள வீட்டில் பழமை வாய்ந்த சிலைகள் பதுக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இச்சிலைகள் பலகோடி ரூபாய் மதிப்புள்ளவை என்றும் இது தொடர்பாக இருவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

