சென்னை: இந்திய அளவில் தொலைத் தொடர்பு மூலம் மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 'அனைவருக்கும் நல்வாழ்வு' திட்ட மையங்களில் அக்டோபர் 12 முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை 2,258,739 தொலைத் தொடர்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து தமிழகத்துக்கு பாராட்டுச் சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா இவற்றை வழங்கினார்.

