சென்னை: முதல்வரின் வாகன அணிவகுப்பில் வந்த காரில் தாம் தொங்கியபடி சென்றது குறித்து, சென்னை மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக யாரும் தம்மை கட்டாயப்படுத்தவில்லை என அவர் கூறினார்.
சென்னையில் புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள சென்றபோது அவரது வாகன அணிவகுப்பில் இடம்பெற்ற ஒரு காரில், அதன் பக்கவாட்டில் தொங்கியபடி சென்றார் மேயர் பிரியா.
இது குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சித்த நிலையில், மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

