நள்ளிரவில் கடற்கரை வழியே சென்ற மூதாட்டியிடம் நகை, பணம் கொள்ளை

நள்ளிரவில் கடற்கரை வழியே சென்ற மூதாட்டியிடம் நகை, பணம் கொள்ளை

2 mins read

சென்னை: புயல், கன­மழை ஆகி­ய­வற்­றுக்கு மத்­தி­யில் சென்னை கடற்­க­ரை­யில் மூதாட்டி ஒருவரைத் தாக்கி, கழுத்தை அறுத்து, நகை, பணம் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட சம்­ப­வம் நடந்­துள்­ளது.

கடந்த சில நாள்­க­ளாக மாண்டஸ் புயல் கார­ண­மாக சென்­னை­யில் மக்­கள் நட­மாட்­டம் குறை­வாக உள்­ளது. குறிப்­பாக சென்னை கடற்­க­ரைப் பகு­தி­யில் பொதுமக்­கள் நட­மாட்­டத்­துக்கு காவல்­துறை தடை விதித்­துள்­ளது. அதை­யும் மீறி பலர் கடற்­க­ரைக்குச் சென்று வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்­கரைப் பகு­தியில் நள்­ளி­ரவு 1.30 மணி­ய­ள­வில் மூதாட்டி ஒருவர் ஆட்­டோ­வில் சென்று கொண்டிருந்தார்.

இந்­நி­லை­யில், அங்கு மது­போதை­யில் வந்த நான்கு இளை­யர்­கள் ஆட்­டோவை நிறுத்தினர். பின்னர், மழை கடுமையாக இருப்பதால் ஆட்டோவில் சில நிமிடங்கள் அமர்ந்து ஓய்வெடுக்க அனுமதிக்குமாறு கேட்டனர். மூதாட்டியும் ஆட்டோ ஓட்டுநரும் இதற்கு ஒப்புக்கொண்ட நிலையில், திடீ­ரென இருவரையும் தாக்­கத் தொடங்­கி­னர்.

இதனால் உதவி கேட்டு அந்­த மூதாட்டி குரல் எழுப்­பத் தொடங்­கி­ய­தும், நான்கு பேரில் ஒரு­வர் அவரது கழுத்தை அறுத்­துள்­ளார். பின்­னர் கழுத்­தில் இருந்த தங்­கச் சங்­கிலி, தங்­கக் கம்மல், ரூ.10,000 ரொக்­கப் பணம் ஆகி­ய­வற்­றைப் பறித்­துக்கொண்டு நான்கு இளை­யர்­களும் ஓட்­டம் பிடிக்க, அந்த மூதாட்டி மீண்­டும் உதவி கேட்டு கூக்­கு­ரல் எழுப்­பி­னார்.

அப்­போது கடற்­கரை சாலை­யில் சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த காவல்­து­றை­யி­னர் தங்­கள் வாக­னத்­தில் வந்­துள்­ள­னர். நான்கு இளை­யர்­கள் தப்­பி­யோ­டு­வ­தைக் கண்டு நிலை­மை­யைப் புரிந்­து­கொண்ட காவ­லர்­கள் அவர்­களை விரட்­டிப் பிடிக்க முற்­பட்­ட­னர். அப்­போது நால்­வ­ரில் ஒரு­வர் கட­லுக்­குள் குதித்து நீந்­தத் தொடங்­கி­னார். எனி­னும் காவ­லர்­கள் அவ­ரைப் பிடித்து கைது செய்­த­னர்.

மற்ற மூன்று பேரும் தப்­பி­யோடிய நிலை­யில், பிடி­பட்ட இளை­ய­ரி­டம் தீவிர விசா­ரணை நடந்து வரு­கிறது. நான்கு பேர் மீதும் கொலை முயற்சி உள்­ளிட்ட சில வழக்­கு­கள் நிலு­வை­யில் இருப்பது தெரி­ய­வந்­துள்­ளது. தப்பி­யோ­டிய மூவ­ருக்­கும் வலை­வீ­சப்­பட்டுள்ள நிலை­யில், பாதிக்­கப்­பட்ட பெண் காயங்­க­ளு­டன் மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

கண்­கா­ணிப்பு அதி­கம் உள்ள கடற்­க­ரைப் பகுதி­யில் நிகழ்ந்­துள்ள இந்­தக் கொள்­ளைச் சம்­ப­வத்தால் பரபரப்பு நிலவுகிறது.