சென்னை, யாழ் இடையே மீண்டும் விமானச் சேவை

சென்னை, யாழ் இடையே மீண்டும் விமானச் சேவை

1 mins read

சென்னை: இலங்­கை­யின் யாழ்ப்­பா­ணம், சென்னை நக­ரங்­க­ளுக்கு இடை­யே­யான விமானச் சேவை மீண்­டும் தொடங்கி உள்­ளது.

கொரோனா நெருக்­கடி கார­ண­மாக கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக இந்த விமா­னச் சேவை­கள் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லை­யில் பல்­வேறு தரப்­பினரின் கோரிக்­கையை ஏற்று இந்த விமா­னச் சேவை தொடங்­கி­யது.

டிசம்­பர் 12ஆம் தேதி முதல் இந்­தச் சேவை மீண்­டும் தொடங்­கும் என்­றும் வாரந்­தோ­றும் நான்கு விமா­னங்­கள் இயக்­கப்­படும் என்றும் இலங்கை நாடா­ளு­மன்­றத்­தில் அமைச்­சர் நிமல சிறி­பால டி சில்வா கூறி­யி­ருந்­தார். இதை­ய­டுத்து நேற்று முன்தினம் சென்­னை­யில் இருந்து சென்ற விமா­னத்­துக்கு பலாலி விமான நிலை­யத்­தில் உற்­சாக வர­வேற்­ப­ளிக்­கப்­பட்­டது.