ஸ்டாலின் பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய பெண்கள்

ஸ்டாலின் பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய பெண்கள்

1 mins read
aed18802-7564-4bd0-94fb-523412811e6e
-

சென்னை: முதல்வர் ஸ்டாலி னுக்கான பாதுகாப்புப் பிரிவில் துப்பாக்கி ஏந்திய ஒன்பது பெண் கமாண்டோக்கள் (படம்) புதிதாகப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் என பல்வேறு பிரிவில் இருந்த இவர்கள், தேர்வு எழுதி, கடும் பயிற்சிக்குப் பிறகு முதல்வரின் பாதுகாப்புக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் துல்லியமாக துப்பாக்கியால் சுடும் திறன், வேகமாக ஓடுதல், கையில் துப்பாக்கி இல்லாமலேயே ஐவருக்கும் மேற்பட்டவர்களுடன் சண்டை போடும் திறன், தற்காப்புக் கலை ஆகிய பயிற்சி பெற்றவர்கள் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் மேற்கொள்ளும் பயணங்களின்போது எக்ஸ் 95 வகை துப்பாக்கி, ஏகே 47 மற்றும் பாதுகாப்பு உடை, அதற்கு மேல் 'சபாரி சூட்' என திரைப்படங்களில் வருவதுபோல் துடிப்புடன் இவர்கள் வலம் வருகின்றனர்.