அமைச்சராகிறார் உதயநிதி

அமைச்சராகிறார் உதயநிதி

2 mins read
40e6b535-f921-4414-af91-a5efb7de8d89
-

சென்னை: தமி­ழக அமைச்­ச­ராக உத­ய­நிதி ஸ்டா­லின் இன்று (டிச. 14) காலை 9.30 மணிக்கு ஆளு­நர் மாளி­கை­யில் பத­வி­யேற்கிறார்.

திமுக அமைச்­ச­ரவை பொறுப்­பேற்­ற­போதே, கட்­சி­யின் இளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டா­லி­னுக்கு அமைச்­ச­ர­வை­யில் இடம் கிடைக்­கும் என்ற எதிர்­பார்ப்பு இருந்­தது.

பின்­னர், உத­ய­நிதி அமைச்­ச­ராக வேண்­டும் என்று சில அமைச்­சர்­கள் வலி­யு­றுத்தி வந்­த­னர். ஆனால், முதல்­வர் ஸ்டா­லின் அமைதி காத்­தார்.

தொகு­திப் பணி­கள், செஸ் ஒலிம்­பி­யாட் முன்­னேற்­பா­டு­கள், சட்­ட­மன்றச் செயல்­பா­டு­கள் என பல நிகழ்­வு­களில் உத­ய­நிதி ஸ்டா­லி­னின் திற­மையைக் கண்­கூ­டாக அறிந்த பின்­னரே அவரை அமைச்­ச­ராக்க முதல்­வர் ஸ்டா­லின் சம்­ம­தித்­தி­ருக்­கி­றார் என்று கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், திமுக உள்கட்­சித் தேர்­தல்­கள் முடிந்து, இளை­ஞ­ர­ணிச் செய­லா­ள­ராக மீண்­டும் உத­ய­நிதி ஸ்டா­லின் தேர்­வா­னார். இதை­ய­டுத்து, அவரை அமைச்­ச­ராக்க வேண்­டும் என்று அமைச்­சர்­கள் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி உள்­ளிட்­டோர் வலியுறுத்தி வந்­த­னர்.

இந்­நி­லை­யில், உத­ய­நி­தியை அமைச்­ச­ர­வை­யில் சேர்க்க முதல்­வர் ஸ்டா­லின் ஒப்­பு­தல் அளித்து, ஆளு­நர் மாளி­கைக்­குப் பரிந்­து­ரைத்­தார். அமைச்­ச­ரவை விரி­வாக்­கம் தவிர, சில மூத்த அமைச்­சர்­கள் கவ­னிக்­கும் துறை­களும் மாற்­றம் செய்­யப்­படும் எனத் தெரி­கிறது.

2021 சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் திமுக வெற்றி பெற்று, முதல்­வ­ராக மு.க.ஸ்டா­லி­னும் 33 அமைச்­சர்­களும் பொறுப்­பேற்­றுக்கொண்­ட­னர்.

பின்­னர் கடந்த ஒன்­றரை ஆண்டு­க­ளாக அமைச்­ச­ர­வை­யில் துறை­கள் மாற்­றம் நடை­பெற்­றது. எனி­னும், அமைச்­ச­ரவை விரி­வாக்­கம் நடை­பெ­ற­வில்லை.

உத­ய­நி­திக்கு இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்­டுத் துறை, சிறப்­புத் திட்ட செய­லாக்­கத் துறை ஆகி­யவை ஒதுக்­கப்­படும் என்று கூறப்­படு­கிறது.

முன்­ன­தாக, இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்­டுத் துறை­யின் செய­ல­ராக இருந்த அபூர்வா மாற்­றப்­பட்டு, டெல்­லி­யில் தமிழ்­நாடு இல்ல உள்­துறை ஆணை­ய­ராக இருந்த மூத்த ஐஏ­எஸ் அதி­கா­ரி­யான அதுல்ய மிஸ்­ரா­வின் செய­ல­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

பத­வி­யேற்பு நிகழ்ச்­சிக்கு எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சா­மி உள்ளிட்ட 400 பேருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ளது.

இந்நிலையில், உத­ய­நிதி அமைச்­ச­ராகப் பத­வி­யேற்­ப­தற்­குக் கடும் கண்­ட­னத்­தைத் தெரி­வித்­துள்­ளார் எடப்பாடி பழனிசாமி.

மறைந்த முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.கரு­ணா­நிதி 1957ல் முதன்­மு­த­லாக சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக பத­வி­யேற்­றார். இத­னை­ய­டுத்து 10 ஆண்­டு­கள் கழித்து 1967ஆம் ஆண்­டு­தான் முதன்­மு­றை­யாக பொதுப்­ப­ணித்­துறை அமைச்­ச­ராக பொறுப்­பேற்­றார். அதே­போல் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டா­லி­னும் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக பத­வி­யேற்று 17 ஆண்­டு­கள் கழித்து 2006ல் தான் முதன்­மு­றை­யாக அமைச்­ச­ரா­னார். அப்­போது அவ­ருக்கு உள்­ளாட்சித் துறை வழங்­கப்­பட்­டது

இந்­நி­லை­யில் 2021ல் முதன்­முறை­யாக சேப்­பாக்­கம் - திரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யில் இருந்து சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரான உத­ய­நிதி ஸ்டா­லின் 19 மாதங்­களில் அமைச்­ச­ராகிறார்.

எனவே, உதயநிதி அமைச்­ச­ரா­கப் பத­வி­யேற்­ப­தைத் தொடர்ந்து அமைச்­ச­ரவை விரி­வாக்­கம் உள்­ளிட்ட சில மூத்த அமைச்­சர்­கள் கவ­னிக்­கும் துறை­களும் மாற்­றம் செய்­யப்­படும் எனத் தெரி­கிறது.