ஒன்பது வகை உணவுகளுடன் பசுவுக்கு வளைகாப்பு

ஒன்பது வகை உணவுகளுடன் பசுவுக்கு வளைகாப்பு

1 mins read
f7653b90-5f77-423f-bb90-e00beb9c8b23
-

கோயம்புத்தூர்: பசு மாடு குறித்து விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தும் வகை­யில், கோயம்புத்தூரில் சினைப் பசு ஒன்றுக்கு சிவ­ன­டி­யார்­கள் வளை­காப்பு நடத்­தி­னர்.

பசு­வின் சிறப்புக் குறித்து விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தும் வகை­யில், உலக சிவ­ன­டி­யார்­கள் திருக்­கூட்­டம் சார்­பில் கோவை இரு­கூர் வெள்­ளேரி அங்­கா­ளம்­மன் கோயி­லில் பசு­வுக்கு வளை­காப்பு விழா நடத்­தப்­பட்­டது.

சிவ­ன­டி­யார் இரு­கூர் நாக­ரா­ஜ­னின் 3 வய­து­டைய காரிப்­பசு, முதல் முறை­யாக சினை­யுற்­ற­தைத் தொடர்ந்து, அப்­ப­சு­வுக்கு பட்­டாடை அணி­வித்து, கழுத்து, கொம்­பு­களில் மலர் மாலை, வளை­யல் அணி­வித்து வழிபாடு செய்­யப்­பட்­டது.

பின்­னர், பொங்­கல், புளி­யோ­தரை, எலு­மிச்சை, தயிர் உள்­ளிட்ட ஒன்பது வகை உண­வு­கள் பசு மாட்­டுக்­கு­ ஊட்­டப்­பட்­டன.

இந்­நி­கழ்ச்­சி­யில் கலந்து கொண்ட பெண்­க­ளுக்கு பிர­சா­தத்­து­டன் வளை­யல், உடை, தாலிச்­சரடு உள்­ளிட்­டவை கொடுக்­கப்­பட்­டன.