தஞ்சாவூர்: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று தனது 60வது பிறந்தநாளை தஞ்சையில் நிர்வாகிகள், தொண்டர்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரளவேண்டும். அப்போதுதான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுவை வீழ்த்த முடியும்.
எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் இல்லை என்பதை பல இடங்களில் மெய்ப்பித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் தவறில்லை. ஆனால் ஏன் இவ்வளவு அவசரத்தில் அமைச்சராக்க மு.க.ஸ்டாலின் நினைக்கிறார் என தெரியவில்லை.
புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து. தி.மு.க. தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கான பதில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

