முதல்வரின் வாகனப் படியில் தொங்கிச் சென்ற சென்னை மேயர்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்

முதல்வரின் வாகனப் படியில் தொங்கிச் சென்ற சென்னை மேயர்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்

2 mins read

சென்னை: சென்­னை­யில் மாண்டஸ் புய­லால் பாதிக்­கப்­பட்ட காசி­மே­டுப் பகு­தி­யைப் பார்­வை­யிட வந்த முதல்­வர் ஸ்டா­லி­னின் வாக­னத்­தின் படி­யில் ஆர்.கே.நகர் திமுக எம்­எல்ஏ எபி­னே­சர், சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகி­யோர் தொங்­கிச் சென்­றனர். அது குறித்த காணொளி இணை­யத்­தில் பரவி வரு­கிறது.

பிரியா, தனது 28வது வய­தில் கடந்த மார்ச் மாதம் சென்னை மேய­ரா­கப் பொறுப்­பேற்­றார். சென்னை மாந­க­ராட்­சி­யின் இளம் மேயர், முதல் தலித் பெண் மேயர், வட­சென்­னை­யைச் சேர்ந்த முதல் மேயர் போன்ற சிறப்­பு­களைப் பெற்­றார். இவர் வணி­க­வி­ய­லில் முது­கலைப் பட்­டம் பெற்­ற­வர். பிரியா, மேய­ரா­கப் பத­வி­யேற்­ற­தில் இருந்து அவ­ரைப் பற்­றிய விமர்­ச­னங்­கள் இணை­யத் தளங்­களில் தொடர்ந்து பகி­ரப்­பட்டு வந்­தன. அமைச்­சர் கே.என்.நேரு இவரை ஒரு­மை­யில் பேசி­னார் என்­றும், அமைச்­சர் சேகர்­பா­பு­வுக்கு இவர் குடை பிடித்­தார் என்­றும் இணை­யத் தளங்­களில் எதிர்க்­கட்­சி­க­ளின் விமர்­ச­னங்­கள் எழுந்­தன.

மேயர்­ பி­ரியா விளக்­கம்: "அமைச்­சர் கே.என்.நேரு என்னை ஒரு­மை­யில் பேச­வில்லை, என்னை மகள் போல் கருதி பேசி­னார். அமைச்­சர் சேகர்­பா­பு­வுக்கு குடை­பி­டித்­தது இயல்­பான செயல்­தான். மழை­யின்­போது குடை­பி­டிப்­பது தவறு இல்லை. மாந­க­ராட்சி சார்­பில் ஏரா­ள­மான பணி­க­ளைச் செய்து வரு­கி­றோம். புயல் தாக்­கி­ய­போது, தூக்­க­மின்றி பணி­யாற்­றி­னர். தனிப்­பட்ட எனது செயலை பரப்­பு­வ­தால் யாருக்­கும் பய­னும் இல்லை. அதற்கு பதி­லாக, மக்­கள் நலப் பணி­யா­ளர்­க­ளின் தியா­கங்­களை இணையத் தளங்­களில் பரப்­ப­லாம்," என்று கூறி­யுள்­ளார்.

இது­பற்றி கூறிய அமைச்­சர் சேகர்­பாபு, ''முதல்­வ­ரு­டன் செல்ல வேண்­டும் என்ற துடிப்­போடு நடந்த செயல் இது. ஆணுக்­கு­நி­க­ராக ஒரு பெண், துணிச்­ச­லு­டன் செய்­யும் பணி­க­ளைப் பாராட்ட வேண்­டுமே தவிர, விமர்­சிக்­கக் கூடாது,'' என்று கூறி­யுள்­ளார்.