நடிகராக இருந்து அமைச்சராகி தமிழக அரசியலில் ஜொலித்தவர்களின் பட்டியல்

நடிகராக இருந்து அமைச்சராகி தமிழக அரசியலில் ஜொலித்தவர்களின் பட்டியல்

2 mins read

சென்னை: தமி­ழக அர­சி­ய­லுக்­கும் திரை­யுலகிற்­கும் மிக­மிக நெருங்­கிய தொடர்புள்ளது. தமி­ழ­கத்­தில் நடி­க­ராக இருந்து அமைச்­சர், முதல்வராகப் பலர் பதவி யேற்றுள்ளனர்.

­அந்தப் பட்­டி­ய­லில் புதி­தாக இப்­போது அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டா­லின் இணைந்துள்­ளார்.

தமிழ்­நாட்­டின் முதல்­வர்­க­ளாக இருந்த புரட்­சித் தலை­வர் எம்­ஜி­ஆர், கலை­ஞர் கரு­ணா­நிதி, புரட்­சித் தலைவி ஜெய­ல­லிதா ஆகி­யோர் தமிழ்த் திரை­யு­ல­கில் முத்­திரை பதித்­த­வர்­கள். ஜெய­ல­லி­தா­வும் எம்­ஜி­ஆ­ரும் நடிப்­பி­லும் கரு­ணா­நிதி தனது திரைப்­பட வச­னத்­தா­லும் மக்­க­ளின் இதயங்களில் அசைக்கமுடி­யாத சிம்­மா­ச­னம் இட்டு அமர்ந்­த­வர்­கள். இவர்­கள் மூவ­ரும் தமிழக அர­சி­ய­லில் தவிர்க்­க­மு­டி­யாத தலை­வர்­க­ளாக உரு­மாறி முத­ல­மைச்­ச­ராகப் பதவி வகித்தவர்கள்.

ஆனால், இவர்­க­ளது பட்­டி­ய­லைத் தொடர்ந்து அர­சி­ய­லில் நுழைந்த சிவா­ஜி­யின் அறி­மு­கம் சொல்­லிக்கொள்­ளும்­படி அமையாமல் தேர்­த­லில் போட்டி­யிட்டு தோல்வியடைந்­தார்.

நடி­கர் சரத்­கு­மார் சமத்­துவ மக்­கள் கட்­சி­யைத் தொடங்கி எம்­எல்­ஏ­வா­னார். அதேபோல், விஜ­ய­காந்த் தேமு­திக கட்­சியைத் தொடங்கி எம்­எல்­ஏ­வா­னார். இவர் கடந்த 2011ல் எதிர்க்­கட்­சித் தலைவரா­க­வும் இருந்தார்.

அதன்­பி­றகு கமல்­ஹா­சன் மக்­கள் நீதி மய்­யம் கட்­சி­யைத் துவக்­கி­னார். இவர் கடந்த சட்­ட­மன்­றத் தேர்தலில் போட்­டி­யிட்டு தோல்வி அடைந்­தார்.

எம்­எல்­ஏ­வான நடி­கர்-நடி­கை­கள்

இது­த­விர திமுக, அதி­முக, பாஜக கட்­சி­களில் நடி­கர், நடிகை கள் தங்­களை இணைத்துக் கொண்டு இயங்கி வரு­கின்­ற­னர்.

திரை­யு­ல­கத்­தைச் சேர்ந்த பல­ரும் எம்­எல்ஏ, எம்­பிக்­க­ளாக இருந்­துள்­ள­னர்.

சட்­ட­ச­பைக்கு முதல்­மு­த­லாக நுழைந்த நடிகை என்­றால் அது கேபி சுந்­த­ராம்­பாள் (எம்­எல்சி), நடி­கர் என்­றால் அது எஸ்­எஸ்­ஆர். இவர் 1962ல் தேனி­யில் இருந்து திமுக சார்­பில் எம்­எல்­ஏ­வா­னார். அதன்­பி­றகு நெப்­போ­லி­யன், ராதா ரவி, சரத்­கு­மார், விஜ­ய­காந்த் வரி­சை­யில் உத­ய­நிதி ஆகி­யோர் எம்­எல்­ஏ­வாக ஜொலித்­துள்­ள­னர். நெப்­போ­லி­யன் எம்­பி­யாக செயல்பட்­டுள்­ளார். மத்­திய அமைச்­ச­ராகவும் நெப்­போ­லி­யன் பொறுப்­பேற்­றார். இவர் முன்­னாள் பிர­த­மர் வாஜ்­பாய் அமைச்­ச­ர­வை­யில் சமூக நீதித்­துறை அமைச்­ச­ராக இருந்­துள்ளார்.

இந்­நி­லை­யில்­தான் உத­ய­நிதி நேற்று ஆளு­நர் மாளிகையில் நடந்த விழா­வில் அமைச்­ச­ராகப் பொறுப்­பேற்­றுள்­ளார்.

திரை­யு­ல­கில் நடி­க­ராக இருந்த இவர் கடந்த ஆண்டு நடந்த சட்­டமன்றத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு எம்­எல்­ஏ­வாகி இப்­போது விளை­யாட்டு, இளை­ஞர் நலன் துறை அமைச்­ச­ராகி உள்­ளார்.