தமிழ்நாட்டின் பத்து அமைச்சர்களின் துறைகள் மாற்றம்

தமிழ்நாட்டின் பத்து அமைச்சர்களின் துறைகள் மாற்றம்

1 mins read

சென்னை: தமி­ழக அமைச்­ச­ர­வை­யில் உத­ய­நிதி ஸ்டா­லின் 35வது அமைச்­ச­ராக புதிய பொறுப்பேற்­றுக்­கொண்­டுள்ள நிலை­யில், ஏற்­கெ­னவே இருந்த 10 அமைச்­சர்களின் துறை­கள் மாற்­றம் செய்­யப்­பட்டு அறிவிக்­கப்­பட்­டுள்­ளன.

அவை பின்­வ­ரு­மாறு:

 கூட்­டு­ற­வுத்­துறை அமைச்­ச­ராக இருந்த ஐ.பெரி­ய­சா­மிக்கு ஊரக வளர்ச்­சித் ­துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 ஊரக வளர்ச்­சித் துறை அமைச்­ச­ராக இருந்த பெரிய கருப்ப னுக்கு கூட்­டு­ற­வுத்­துறை ஒதுக்­கீடு.

 வனத்­துறை அமைச்­ச­ராக இருந்த ராமச்­சந்­தி­ர­னுக்கு சுற்று லாத்­ துறை ஒதுக்­கீடு.

 சுற்­று­லாத்­துறை அமைச்­ச­ராக இருந்த மதி­வேந்­த­னுக்கு வனத்­துறை ஒதுக்­கீடு.

 பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலத் துறை அமைச்­ச­ராக இருக்­கும் ராஜ­கண்­ணப்­ப­னுக்கு கதர், கிரா­மத் தொழில் வாரி­யத் துறை­கள் ஒதுக்­கீடு.

 ஜவுளி, கைத்­த­றித் ­துறை அமைச்­சர் காந்தி வசம் உள்­ளது.

 சி.வி.மெய்­ய­நா­த­னுக்கு சுற்­றுச் சூழல் ­துறை, மாசுக்­கட்­டுப்­பாடு துறை ஒதுக்­கீடு.

 இந்­து­ச­மய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் சேகர்­பாபு அதே துறையைக் கவ­னிப்­பார். கூடு­த­லாக சென்னை பெரு­ந­கர வளர்ச்சிக் குழு­மத்தையும் கவ­னிப்­பார்.

 வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்து சாமி அதே துறையைக் கவனிப்பார்.

 நிதி­ய­மைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜ­னுக்கு அமைச்­சர் ஐ.பெரி­ய­சாமி வசமிருந்த புள்­ளி­யியல் துறை கூடு­த­லாக ஒதுக்­கீடு செய்யப்பட்டுள்ளது.