சிங்கப்பூரை முன்மாதிரியாகக் கொண்டு வில்லிவாக்கத்தில் கண்ணாடிப் பாலம்

சிங்கப்பூரை முன்மாதிரியாகக் கொண்டு வில்லிவாக்கத்தில் கண்ணாடிப் பாலம்

2 mins read
d3328afb-130f-4153-a1a0-5028c8dd2c15
-

சென்னை: தமிழ்­நாட்­டில் முதல் முறை­யாக வில்­லி­வாக்­கம் ஏரி­யில் மக்­கள் உற்­சா­க­மாக நடந்து செல்­லும் வகை­யில் பிரம்­மாண்டமான கண்­ணா­டிப் பாலம் அமைக்கப்­பட்டு உள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் உள்ள பாலத்தை முன்­மா­தி­ரி­யா­கக் கொண்டு பொது­மக்­கள், சுற்­று­லாப் பய­ணி­க­ளைக் கவ­ரும் வகை­யில் இப்­பா­லம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

விரை­வில் இப்­பா­லத்தை மக்­களின் பயன்­பாட்­டுக்கு கொண்டு வர­வும் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப் பட்டு வரு­கின்­றன.

250 மீட்­டர் நீளம், ஒரு மீட்­டர் அக­லத்­தில் இப்­பா­லம் ரூ.8 கோடி செல­வில் அமைக்­கப்­பட்டு உள்­ளது.

ஒரே­ச­ம­யத்­தில் பாலத்­தின் மீது ஏரி­யின் அழகை ரசித்­த­படி 250 பேர் நடந்து செல்­ல­லாம் என்­றும் தக­வல்­கள் குறிப்­பிட்­டுள்­ளன.

இந்­தப் பாலத்­தின் மீது நடந்து செல்­லும்­போது தண்­ணீர் மீது நடந்து செல்­வது போன்ற உணர் வையும் ஏற்­ப­டுத்­தும்.

இப்­பா­லத்­தில் பொது­மக்­கள் எளி­தாக ஏறிச்­செல்­லும் வகை­யில் படிக்­கட்­டு­களும் மின்­தூக்கி வசதி­களும் அமைக்­கப்­பட்டு உள்­ளன.

தற்­போது இதன் இறு­திக் கட்­டப் பணி­கள் மும்­மு­ர­மாக நடந்து வரு­கின்­றன.

39 ஏக்­கர் பரப்­ப­ளவு கொண்ட இந்த ஏரியை மறு சீர­மைப்பு செய்து பொழு­து­போக்கு பூங்­கா­வாக மாற்­றும் பணி­யைச் சென்னை மாந­க­ராட்சி செய்து வரு­கிறது.

'ஸ்மார்ட் சிட்டி' திட்­டத்­தின் கீழ் ரூ.37 கோடி செல­வில் இந்­தப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இந்த ஏரி­யைச் சுற்­றி­லும் பட­குச் சவாரி, பூங்கா, சிறு­வர்­கள் விளை­யா­டு­வ­தற்­கான ராட்­டி­னம், குட்டி ரயில்­கள், நீர் விளை­யாட்டு, இசை நீரூற்று, 12-D திரை­ய­ரங்­கு­கள், ஏரா­ள­மான கடை­கள், உண­ வ­கங்­கள், விளையாடும் இடம், வாகன நிறுத்­து­மி­டம், கண்­கவர் விளக்­கு­கள், ஏரி­யைச் சுற்றி பல கிலோ மீட்டர் தூர நடை­பாதை என அனைத்து வசதிகளும் இங்கு அமைக்­கப்­பட்டு வரு­கின்றன.